சந்திரமுகி 2: ராகவா லுக்! பெருசா ஒன்னும் இல்லியே?
சந்திரமுகி 2 படத்திலிருந்து வெளியான வேட்டையன் ராஜா லுக்கை பார்த்தவர்கள் இது அது இல்ல என்று கேலி செய்து வருகின்றனர்.;
ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் இணைந்து நடிக்க வாசு இயக்கும் படம் சந்திரமுகி 2. இது ரஜினியின் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்லப்பட்டாலும் அதற்கும் இதற்கும் சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை.
கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படத்தில் நாயகனாக ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேலு, நாசர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது. 90ஸ் கிட்களின் மிக விருப்பமான படமாக இது இன்றும் இருக்கிறது. இந்த படத்தில் வரும் பெரிய பாம்பு படத்தில் எதற்காக வருகிறது என்று இன்றும் யோசித்து வருகிறார்கள் 90ஸ் கிட்ஸ். மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
சந்திரமுகி 2 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. பி வாசு இயக்குகிறார். இப் படத்தின் படப்பிடிப்பு மைசூரு, ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றது. படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது post-production பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் ராகவா லாரன்ஸின் வேட்டையன் ராஜா போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது.
படத்தின் பர்ஸ்ட் லுக்கை பார்த்தவர்கள் இது என்னடா வேட்டையன் ராஜாவுக்கான மரியாதை போயிடிச்சே என வருத்தப்பட்டு வருகின்றனர். ரஜினி நடித்த கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பதை பலரும் எதிர்த்தே வருகின்றனர். காரணம் அந்த கதாபாத்திரத்துக்கான கிரேஸ் ராகவா லாரன்ஸிடமிருந்து எப்படி கிடைக்குமோ என்கிற பயம்தான்.
சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ் வேட்டையன் ராஜா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கங்கனா ரனாவத் சந்திரமுகியாக நடித்துள்ளார். இவர்களுடன் வடிவேலு, நாசர், ராதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்திரமுகி 2 படம் விநாயகர் சதுர்த்தி 2023 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் வெளியீடு குறித்து ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.