தனுஷ், சந்தீப், ஷிவராஜ்குமாருடன் இன்னொரு ஹீரோ... பெரிதாகும் கேப்டன் படம்!
அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் கேப்டன் மில்லர். இதில் தனுஷ் ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். மிக ரகசியமாக இந்த படத்தில் இன்னொரு ஹீரோவையும் நடிக்க வைத்து வருகின்றனராம்;
பெரிய படமாகும் கில்லர் கில்லர் கேப்டன் மில்லர். இது லிஸ்ட்லயே இல்லாம உள்ள வந்த இன்னொரு ஹீரோ யாருன்னு தெரிஞ்சா நீங்களும் ஷாக் ஆவீங்க
தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படமும் மல்டி ஸ்டாரர் படமாக உருமாறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமான கதாபாத்திரங்களில் பிரபலமான நடிகர்களை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனராம்.
தனுஷ் நடிப்பில் கடைசியாக மிகப் பெரிய வெற்றி பெற்ற படம் திருச்சிற்றம்பலம். மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய பாராட்டைப் பெற்ற இந்த படத்துக்கு பிறகு தனுஷ், செல்வராகவன் நடிப்பில் செல்வராகவன் இயக்கிய படம் நானே வருவேன். சரியாக போகாத இந்த படத்தைத் தொடர்ந்து அவர் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியான இந்த படம் வாத்தியும் மண்ணைக் கவ்வியது.
இப்போது அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் கேப்டன் மில்லர். இதில் தனுஷ் ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். இவர்களுடன் ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், குமரவேல், டேனியல் பாலாஜி, மூர், நாசர், விஜி சந்திரசேகர், சுவயம்சிதா தாஸ், பிந்து, அருணோதயன், "மேற்குத் தொடர்ச்சி மலை" ஆண்டனி, பால சரவணன் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் நடித்து வருகின்றனர். முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் நடிக்கிறார்.
இந்நிலையில், மிக ரகசியமாக இந்த படத்தில் இன்னொரு ஹீரோவையும் நடிக்க வைத்து வருகின்றனராம். அவர் வேறு யாரும் இல்லை உறியடி விஜய் தான். விஜய் தற்போது கேப்டன் மில்லர் ஷூட்டிங் தளத்தில் இருப்பதை பலரும் கவனித்துள்ளனர். இதுகுறித்து விசாரித்தபோது அவரும் படத்தில் இருக்கிறாராம்.
படத்துக்கு இசை ஜிவி பிரகாஷ். சத்யஜோதி டி ஜி தியாகராஜன் தயாரிக்கும் இந்த படத்தின் பின்னணி வரலாற்று கதையாகும். 1930-40 களில் உருவாகிறது இந்த படம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படும் என தெரிகிறது. அதுவும் வரும் தீபாவளி நாளில் இந்த படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. வரலாற்று கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் இன்னும் பல கதாபாத்திரங்களில் பிரபலமானவர்களை நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம்.