கேப்டன் மில்லர் படம் எப்ப ரிலீஸ் தெரியுமா?
தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படமும் தீபாவளிக்கு வருகிறதாம். இதனால் தீபாவளிக்கு தமிழில் படங்கள் அலைமோதும் என்று கணிக்கப்பட்டுள்ளது.;
தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படமும் தீபாவளிக்கு வருகிறதாம். இதனால் தீபாவளிக்கு தமிழில் படங்கள் அலைமோதும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் நடிப்பில் கடைசியாக மிகப் பெரிய வெற்றி பெற்ற படம் திருச்சிற்றம்பலம். மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய பாராட்டைப் பெற்ற இந்த படத்துக்கு பிறகு தனுஷ், செல்வராகவன் நடிப்பில் செல்வராகவன் இயக்கிய படம் நானே வருவேன். சரியாக போகாத இந்த படத்தைத் தொடர்ந்து அவர் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியான இந்த படம் வாத்தியும் மண்ணைக் கவ்வியது.
இப்போது அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் கேப்டன் மில்லர். இதில் தனுஷ் ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். இவர்களுடன் ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், குமரவேல், டேனியல் பாலாஜி, மூர், நாசர், விஜி சந்திரசேகர், சுவயம்சிதா தாஸ், பிந்து, அருணோதயன், "மேற்குத் தொடர்ச்சி மலை" ஆண்டனி, பால சரவணன் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் நடித்து வருகின்றனர்.
முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் நடிக்கிறார். படத்துக்கு இசை ஜிவி பிரகாஷ். சத்யஜோதி டி ஜி தியாகராஜன் தயாரிக்கும் இந்த படத்தின் பின்னணி வரலாற்று கதையாகும். 1930-40 களில் உருவாகிறது இந்த படம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படும் என தெரிகிறது. அதுவும் வரும் தீபாவளி நாளில் இந்த படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படமும் ரஜினிகாந்தின் ஜெயிலர் படமும் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், கார்த்தியின் ஜப்பான் படமும், தனுஷின் கேப்டன் மில்லர் படமும் தீபாவளிக்கு வரும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே அஜித்குமார் நடிப்பில் 62வது படம் தீபாவளி நாளில் வெளியாகவேண்டும் எனக் கூறித்தான் கதையே கேட்டு வருகிறார் என்கிறார்கள். இப்படி படங்கள் போட்டி போட்டாலும் நாள் நெருங்க நெருங்க பேக் அடிக்கும் அல்லது முன்கூட்டியே ரிலீஸாகிவிடும்.