காலண்டர் பாடல் வரிகள்!

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்திலிருந்து காலண்டர் பாடல் வெளியாகியுள்ளது.;

Update: 2024-07-01 12:30 GMT

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்திலிருந்து காலண்டர் பாடல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996ம் ஆண்டு வெளியான படம் இந்தியன். தமிழகத்தின் அரசு நிர்வாகத்தில் நிகழும் லஞ்சம் முறைகேடுகளுக்கு எதிரான படமாக இது அமைந்தது. அந்த நாளில் மிகப்பெரிய அரசியல் படமாக இது அமைந்தது.

இந்நிலையில் 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது வெளியாக இருக்கிறது. இந்த மாதம் 12ம் தேதி உலகம் முழுக்க பல்வேறு திரைகளிலும் வெளியாகும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாராகியுள்ளது.

கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், எஸ் ஜே சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரகனி ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் சக்கைப் போடு போடுகின்றன.

இந்நிலையில், தற்போது காலண்டர் பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த பாடலின் வரிகள் பால்வெளி பாதை மேலே மேகமாய் உலவலாமே என தொடங்குகிறது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த பாடல் டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.

கபிலன் வைரமுத்து எழுதியுள்ள இந்த பாடல், பாப் சிங்கர் சுவி, ஸ்ரவண பார்கவி, ஐஸ்வர்யா சுரேஷ் ஆகியோரால் பாடப்பட்டுள்ளது. இதில் கடந்த 2017ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற டெமி-லீ டெபோ நடனமாடியுள்ளார்.


Full View


Tags:    

Similar News