சீன சண்டைக் கலையைத் தோற்றுவித்தவரும் ஹாலிவுட் நடிகரும் ஆன புரூஸ் லீ

சீன சண்டைக் கலையைத் தோற்றுவித்தவரும், தற்காப்புக்கலை நிபுணரும், ஹாலிவுட் நடிகரும் ஆன புரூஸ் லீ நினைவு நாள் இன்று.

Update: 2021-07-20 04:41 GMT

 புரூஸ் லீ

சீன சண்டைக் கலையைத் தோற்றுவித்தவரும், தற்காப்புக்கலை நிபுணரும் ஹாலிவுட் நடிகரும் ஆன புரூஸ் லீ நினைவு நாள்

இதே - ஜூலை 20, 1973 Enter the Dragon, The Way of the Dragon, போன்ற படங்களில் நடித்த தற்காப்புக்கலை நிபுணரும் ஹாலிவுட் நடிகரும் ஆன புரூஸ் லீ மறைந்து 48 ஆண்டுகள் ஆகிறது. கராத்தே கலையுடன் சில நுணுக்கங்களை சேர்த்து புரூஸ் லீ உருவாக்கிய புதிய ஜீட் குன் டோ என்ற உள்ளொளித் தற்காப்பு கலை அவரது பெயரிலேயே 'புரூஸ் லீ குங்பூ' என அழைக்கப்பட்டது.

புரூஸ் லீ என பரவலாக அறியப்படும் ஆங்காங் மற்றும் அமெரிக்கத் திரைப்பட நடிகர், இயக்குநர் (திரைப்படம்), தற்காப்புக் கலைஞர், தற்காப்புக் கலைகள் பயிற்றுநர், மெய்யியலாளர், ஜீத் குன் தோ எனும் உஷூ அல்லது சீன சண்டைக் கலையைத் தோற்றுவித்தவரும் ஆவார்.

புரூஸ் லீ சான் பிரான்சிஸ்கோ, சைனா டவுனில் நவம்பர் 27, 1940 இல் பிறந்தார். சீன ஜோதிடத்தின் படி இவர் பிறந்த ஆண்டு மற்றும் நேரம் ஆகிய இரண்டும் டிராகன் (சீன ஜோதிடம்) ஆகும். அவர்களின் மரபு படி இது வலிமையான சகுனமாகப் பார்க்கப்படுகிறது. இவர்களின் பெற்றோர் ஹாங்காங்கில் பிறந்து கவுலூனில் குடியேறினர். இவரின் தந்தையால் இவர் திரை உலகத்திற்கு அறிமுகம் ஆனார். சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

இவர் 1971 ம் ஆண்டு லோ வீ இயக்கிய த பிக் பாஸ், 1972 ம் ஆண்டு ஃபிஸ்ட் ஆஃப் ஃபியூரி, கோல்டன் ஹார்வஸ்ட் இயக்கிய ராப்ர்ட் கிளவுஸ் இயக்கத்தில் வே ஆஃப் தெ டிராகன், 1978 இல் தெ கேம் ஆஃப் தெ டெத் போன்ற திரைப்படங்களின் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

அவர் தனது வருங்கால மனைவி ஆசிரியர் பயிற்சி படிக்கும் சக மாணவியான லிண்டா எமெரியை சந்தித்தார், அவர்கள் 1964 ஆகஸ்டில் திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதியருக்கு பிராண்டன் (1965-1993) மற்றும் ஷானன் லீ (பிறப்பு 1969) என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தது.


என்டர் த ட்ராகன்' வெளியாவதற்கு மூன்று வாரங்கள் முன்பு 1973-ம் ஆண்டு ஜுலை 20 மரணத்தை தழுவினார் புரூஸ் லீ. அன்று இரவு தலைவலி என்று தூங்கச் சென்ற புரூஸ் லீக்கு தூக்க மாத்திரை ஒன்று கொடுக்கப்பட்டது. அதன் பின் அவர் எழவே இல்லை. 'கோமா' நிலைக்கு சென்றவர் ஹாங்காங் குயின் எலிசபெத் மருத்துவமனையில் நினைவு திரும்பாமலே காலமானார். தனது 33-வது வயதிலேயே புரூஸ் லீ மரணத்தை தழுவியது பெரும் இழப்பு.

Tags:    

Similar News