வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா? "டாப்சீபன்னு" நடிகை யாருங்க?

தேசிய விருது பெற்ற திரைப்படமான ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு, வெள்ளாவி வச்சு வெளுத்த வெள்ளைக்காரியாக நம் அனைவருக்கும் பரிச்சயமான நடிகை டாப்ஸி பன்னு பிறந்தநாள்

Update: 2021-07-31 23:17 GMT



டாப்சி பன்னு 1987 ம் ஆண்டு ஆகஸ்ட் 01 ம் தேதி டெல்லியில் பிறந்தவர். மாடலாக இருந்து பின்னர் நடிகையானவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தித் திரைத்துறையில் தற்போது பணியாற்றி வருகிறார். பஞ்சாபிய சீக்கியக் குடும்பத்தில் பிறந்தவர், வடிவழகுத்துறையில் நுழையும் முன்னர் மென்பொருள் நிபுணராக பணியாற்றினார். 2010 இல் சும்மாண்டி நாதம் எனும் தெலுங்குத் திரைப்படம் மூலம் திரைத்துறையுலகில் நுழைந்தார். இவர் ஆடுகளம் , வந்தான் வென்றான் போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அவரைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இன்ஸ்டாநியூஸ்

வாசகர்கள் உங்களுக்காக...

வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா என பலரையும் கேட்க வைத்த அதீத அழகும் சிறந்த நடிப்பும் கொண்டவர் நடிகை டாப்ஸி பன்னு.

ஹிந்தி திரைப்படத் துறையில் மிக வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தும், பெண்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தும் வரும் டாப்ஸியை ரசிகர்கள் பலரும் தங்கத் தாரகையாக தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர்.

தனது ஒவ்வொரு படங்களின் மூலமும் இவ்வாறு நம் அனைவரையும் ரசிக்க வைத்து வரும் டாப்ஸி ஆகஸ்ட் 1 ம் தேதியான இன்று தனது 34 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி இவரது ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களின் மூலம் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணி இரண்டாம் முறையாக இணைந்து தேசிய விருது பெற்ற திரைப்படமான ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு, வெள்ளாவி வச்சு வெளுத்த வெள்ளைக்காரியாக நம் அனைவருக்கும் பரிச்சயமானவர் நடிகை டாப்ஸி பன்னு.


தமிழில் ஒரு சில திரைப் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத ஒரு நடிகையாக டாப்ஸி இருந்து வருகிறார். எனினும் ஹிந்தியில் இவர் நடித்த பல திரைப்படங்கள் தமிழில் இன்றளவும் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி கொண்டு வருகிறது.

அந்த வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு டாப்ஸி மற்றும் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான "பிங்க்" திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்கான "நேர்கொண்ட பார்வை" தல அஜித் நடிப்பில் வெளியாகி தமிழ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுத்து வேற லெவல் ஹிட்டானது.

டாப்ஸியுடன் இணைந்து அறிமுகமான பல கதாநாயகிகள் இன்றளவும் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடிப்பதையே விரும்பும் நிலையில் டாப்ஸி அதிலிருந்து சற்று விலகி பெண்களைப் பற்றிய சமூக விழிப்புணர்வு கொண்ட படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அவ்வாறு இவர் நடித்த "தப்பட்", "சாண்ட் கி ஆன்க்", "ஹசீன் தில்ருபா" உள்ளிட்ட திரைப்படங்கள் இவரை கதாநாயகிகளில் வித்தியாசமான ஒரு நடிகையாக பலரையும் பார்க்க வைத்தது.

படங்களின் மூலம் பெண்களுக்காக குரல் கொடுத்துவரும் டாப்ஸி பன்னு, நிஜத்திலும் பல்வேறு நிலைகளில் பெண்களுக்கு நடக்கும் அவலங்களை பற்றி தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். இவ்வாறு அழகும் துணிச்சலும் கொண்டு இந்தியத் திரைப்படத்துறையில் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு டாப்ஸி வெற்றி நாயகியாக வலம் வருகிறார்.


ஆடுகளம் படத்திற்கு பிறகு தமிழில் சரியாக அமையாததால் தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் பல திரைப்படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஹசீன் தில்ரூபா நெட்பிளிக்ஸில் நேரடியாக வெளியானது. கணவனை கொலை செய்யும் பெண் கேரக்டரில் டாப்ஸி மிரட்டி இருப்பார். அவள் ஏன் கொலை செய்கிறார் என்பதை மிகவும் சாமர்த்தியமாக எதிர்பாராத திருப்பத்துடன் படம் முடிகிறது.

தற்போது டாப்ஸி, சபாஷ் மித்து, கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். தமிழில் ஜன கண மன போன்ற திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும், மிஷன் இம்பாசிபிள் என்ற தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகி உள்ளார்.

திரைப்படங்களிலும், நிஜத்திலும் நம் அனைவரையும் தொடர்ந்து ஆச்சரியப்படுத்தி வரும் டாப்ஸி பன்னு இன்று தனது 34 வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி நண்பர்கள் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.


என்னை ராசி இல்லாத நடிகை என்று ஒதுக்கினார்கள். படங்கள் தோல்வி அடைவதற்கு கதைதான் காரணம் என்று நடிகை டாப்சி கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியை பார்க்கலாம்.

நடிகை டாப்சி அளித்த பேட்டி இது தான்...

"நான் தமிழ், தெலுங்கு மொழிகளில் நிறைய படங்களில் நடித்து விட்டேன். ஐதராபாத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இரு மொழி படங்களிலும் நடித்து வந்தேன். சொந்தமாக வீடு வாங்கவும் திட்டமிட்டேன். ஆனால் கமர்சியல் படங்கள் அமையாததால் நான் நடித்த பல படங்கள் தோல்வி அடைந்து விட்டது.

இதனால் என்னை ராசி இல்லாத நடிகை என்று முத்திரை குத்தி ஒதுக்கினார்கள். வருத்தமாக இருந்தது. நடிப்பது மட்டும்தான் எனது வேலை. படம் தோல்வி அடைவதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? நல்ல கதை, திரைக்கதையாக இருந்தால் ஓடும். இல்லாவிட்டால் ஓடாது. கதைக்கும் நடிகையான எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது.

ஆனாலும் நஷ்டத்துக்கு என்னை முழு பொறுப்பாக்கி விட்டு அவர்கள் தப்பித்தனர். சம்பளமும் குறைவாகவே தந்தார்கள். இவற்றை மற்றவர்களிடம் சொல்ல முடியாமல் எனக்குள்ளேயே வைத்து மன அழுத்தத்துக்கு உள்ளாகி தவித்தேன். குடும்பத்தினர்தான் ஆறுதலாக இருந்தார்கள்.

அதன்பிறகு இந்திக்கு போனேன். அங்கு எனக்கு நல்ல கதைகள் அமைந்தன. நான் நடித்த தேவி, பிங்க், நாம் சபானா போன்ற படங்கள் நன்றாக ஓடி பெயர் வாங்கி கொடுத்தன. இப்போது இந்தியில் பட வாய்ப்புகள் குவிகிறது. தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சத்தில் நிறைய படங்கள் வருகின்றன.

இந்த மாற்றத்துக்கு ரசிகர்கள்தான் காரணம். அவர்கள் நிறைய ஹாலிவுட் படங்கள் பார்க்க ஆரம்பித்து விட்டனர். அவர்களால்தான் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் அதிகம் தயாராகின்றன. இது நல்ல வளர்ச்சி. சினிமா துறைக்கு பெண்கள் அதிகமாக வர ஆரம்பித்து இருக்கிறார்கள்.

நான் அவர்களுக்கு சொல்லும் அறிவுரை என்னவென்றால் நீங்கள் யாரையும் சார்ந்து இருக்க கூடாது. அம்மா, அப்பா, அண்ணன்கள் துணைக்கு வரவேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது. உங்கள் தேவைகளை நீங்களே கவனித்துக்கொள்ள வேண்டும். எந்த பிரச்சினைகளையும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்".இவ்வாறு டாப்சி கூறியுள்ளார்.


மற்றொரு பேட்டியில்...

என் பெற்றோர் மற்றும் நண்பர்கள் பலரும் திருமணம் எப்போது என்று கேட்டு வருவதாகவும் கூறியுள்ள டாப்ஸி. திருமணம் குறித்து பல தகவல்களை மனம் திறந்து பேசினார். தன்னுடைய திருமணம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். என் பெற்றோர் திருமணம் செய்து கொள் என்கின்றனர். நான் எப்போது திருமணம் செய்து கொள்வேன் என்று அவர்கள் கவலைப்படுகிறார்கள். சினிமாத்துறையில் நான் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும்.

இன்னும் சில வரையறைகளை நான் எட்ட வேண்டும். தற்போது நான் வருடத்திற்கு இரண்டு மூன்று திரைப்படங்களில் நடித்து வருகிறேன். அந்த நிலை மாற வேண்டும் ஐந்து, ஆறு படங்களில் நான் நடிக்க வேண்டும். இந்த நேரத்தில் எனது தனிப்பட்ட வாழ்க்கையில் நான் நுழைவதற்கோ நேரத்தை செலவிடுவதற்கோ போதிய நேரம் இல்லை என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News