BB Tamil S7 Elimination இவங்கதானாமே?

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் முதல் வாரமே எலிமினேசன் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

Update: 2023-10-07 17:00 GMT

 கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் முதல் வாரமே எலிமினேஷன் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அனன்யா ராவ் முதல் போட்டியாளராக வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது. தமிழில் இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ள நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த வாரம் கோலாகமலாக தொடங்கப்பட்டது. பிக்பாஸ் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் இரண்டு வீடுகளுடன் வித்தியாசமான விதிமுறைகளுடன் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரத்திலேயே கேப்டனை கவராத போட்டியாளர்கள் என நிக்சன், பவா செல்லதுரை, வினுஷா, ஐஷூ, அனன்யா, ரவீனா ஆகிய 6 பேர் சுமால் பாஸ் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் விதிகளை மீறிய காரணத்தால் விசித்ரா மற்றும் யுகேந்திரன் ஆகிய இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுமால் பாஸ் வீட்டுக்கு சென்றனர். ஏற்கனவே சமையல் வேலை முழுவதும் செய்துவந்த சுமால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ், பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் உடனான டாஸ்க்கில் தோற்றதால் பிக்பாஸ் வீட்டை சுத்தம் செய்வது, பாத்ரூம் கழுவுவது உள்ளிட்ட வேலைகளையும் செய்ய உத்தரவிட்டார் பிக்பாஸ்.

இப்படி முதல் வாரமே சண்டையும் கலாட்டாவும் நிறைந்ததாக சென்றது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார். மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் தான் இந்த வெளியேற்றும் படலம் நடக்கும். அந்த வகையில் இந்த வார எவிக்‌ஷனில் யுகேந்திரன், பிரதீப், ரவீனா, ஐஷூ, அனன்யா, பவா செல்லதுரை மற்றும் ஜோவிகா ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.

இந்நிலையில், வார இறுதியான இன்று முதல் எலிமினேஷன் நடந்துள்ளது. அதன்படி, பிக்பாஸ் 7-வது சீசனில் இருந்து முதல் போட்டியாளராக அனன்யா வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமால் பாஸ் வீட்டில் தன்னுடைய கருத்துக்களை கூறி படிப்படியாக மக்கள் மனதை கவர்ந்த போட்டியாளராக வலம் வந்து கொண்டிருந்த அனன்யா ராவ் தற்போது முதல் வாரத்திலேயே எலிமினேட் ஆகி உள்ள தகவல் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அனன்யா ராவ் வெளியேறியதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த விஷயங்கள், பிக்பாஸ் வீட்டில் அவர் வெளிப்படுத்திய கருத்துக்கள், அவரது நடவடிக்கைகள் ஆகியவை இந்த முடிவுக்கு காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அனன்யா ராவ் வெளியேறியதையடுத்து, பிக்பாஸ் வீட்டில் 17 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். அடுத்த வார எலிமினேஷனில் யார் வெளியேறுவார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

அனன்யா ராவ் வெளியேற்றம் குறித்த ரசிகர்களின் கருத்துக்கள்

அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டதற்கு ரசிகர்கள் பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர். அவரது வெளியேற்றம் நியாயமில்லை என்று கூறி பலரும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News