பிக்பாஸ் 6 சீசனுக்கு முதல் கன்டெஸ்டண்டும் ரெடி? – ஸ்டார்ட் பண்ணிற வேண்டியதுதானே!
Biggboss Tamil Season 6 - 2017ஆம் ஆண்டில், விஜய் டிவியில், இந்தியில் சக்கைப்போடு போட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் தமிழ் பதிப்பு துவங்கப்பட்டது. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதால், அந்த நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது.;
Biggboss Tamil Season 6 - பிக்பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்கள் முடிவுற்ற நிலையில், பிக்பாஸ் அல்டிமேட்டும் நிறைவு பெற்றுள்ளது. 6வது சீசன் எப்போது துவங்கும் என்று ரசிகர்கள் விஜய் டிவி முன் வழி மேல் காத்துக் கொண்டு உள்ளனர்.
விஜய் டிவி என்றாலே, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. அதில் வரும் நிகழ்ச்சிகள் அனைத்தும் அனைத்து வயதினரை கவரும் வகையில் அமைந்துள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல. 2017ஆம் ஆண்டில், விஜய் டிவியில், இந்தியில் சக்கைப்போடு போட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் தமிழ் பதிப்பு துவங்கப்பட்டது. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதால், அந்த நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது.
Biggboss Tamil Season 6 - பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்களை நிறைவு செய்துள்ளது. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, 3வது சீசனில் முகென் ராவ், நான்காவது சீசனில் ஆரி அர்ஜூனன் மற்றும் ஐந்தாவது சீசனில் ராஜூ ஜெயமோகன் வின்னர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பிக்பாஸில் சிம்பு : இந்நிலையில், டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி திரையிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியிலும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக பாலாஜி முருகதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓடிடியில் திரையிடப்பட்ட இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கமல்ஹாசன் பணியாற்றி வந்த நிலையில், அவர் திடீரென அதிலிருந்து விலகிக் கொண்டார். இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.
Biggboss Tamil Season 6 -ஒவ்வொரு ஆண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூன் மற்றும் ஜூலை மாதங்களிலேயே துவங்கி விடும். கொரோனா தொற்று காலத்தில் மட்டும் சற்று தாமதமாக துவங்கியது நினைவிருக்கலாம். தற்போது கொரோனா தொற்று முற்றிலும் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், பிக்பாஸ் சீசன் 6 குறித்த செய்திகள் அரசல் புரசலாக சமூகவலைதளங்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்றன.
இவரா கன்டெஸ்டண்ட்? : சமீபத்தில் விவகாரத்து பெற்ற கோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளரின் மனைவி தான், பிக்பாஸ் சீசன் 6-ன் முதல் கண்டெஸ்டண்ட் என்ற தகவல் தற்போது வைரலாக பரவி வருகிறது. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால் மட்டுமே இது நிச்சயம்.
Biggboss Tamil Season 6 - ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6 எப்போது துவங்கும் என்பது விஜய் டிவி நிர்வாகத்தினருக்கு மட்டுமே வெளிச்சம்!