விஜய்யுடன் நடித்த அனுபவம்.. பிக்பாஸ் ஜனனி என்ன சொன்னார் தெரியுமா?
விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார் பிக்பாஸ் ஜனனி.
லியோ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்த பிக்பாஸ் ஜனனி, சேர்ந்து நடித்ததைப் பற்றி தனது உணர்வுகளைப் பகிர்ந்துள்ளார்.
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ திரைப்படம் முதல் நாளே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஒவ்வொரு காட்சிக்கு ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் படத்தைப் பார்த்துவிட்டு திரும்பி வருகிறார்கள். ஒரு சிலர் சில குறைகளைச் சொன்னாலும், படத்துக்கு, பலத்த எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படையெடுத்து வந்த வண்ணம் இருக்கின்றனர்.
இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் ஒட்டுமொத்தமாக 120 கோடி ரூபாய் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதில் உலக அளவில் இந்தியா தவிர்த்த நாடுகளில் மட்டும் 60 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறதாம். இந்தியாவில் மட்டும் 60 கோடி ரூபாய் வசூல் வேட்டை நடத்தியிருக்கிறது. இதனால் படம் நிச்சயம் பிளாக்பஸ்டர் என்று தயாரிப்பு நிறுவனமே குறிப்பிட்டுள்ளது.
முதல் நாளே 120 கோடி ரூபாய் என்பதால், அடுத்தடுத்து இன்னும் 5 நாட்கள் விடுமுறை தினங்களாக இருக்கின்றன. இதனால் அதிக வசூலைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் தினங்களில் இதைவிட அதிகமான வசூலைப் பெறும் என்று கூறப்படுகிறது. எப்படியும் 500 கோடி வசூல் உறுதி என்று நம்பப்படுகிறது.
பிக்பாஸ் ஜனனி
படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரமாக நடித்திருப்பார் பிக்பாஸ் ஜனனி. அவருக்கு திருமணம் செய்து வைக்கும் விஜய், ஒரு அண்ணனாக இந்த படத்தில் அவரைக் காப்பாற்ற வேண்டிய ஒரு சூழலில் தன்னிடமிருந்த அனைத்து பணத்தையும் கொள்ளைக்கார கும்பலிடம் கொடுத்துவிடுவார். ஆனால் அந்த காட்சியில் மிகப் பெரிய தவறு ஒன்றை செய்ய படம் வேறு ஒரு பரிமாணத்துக்கு சென்றுவிடும். இப்படி முக்கியமான கதாபாத்திரத்தில் ஜனனி நடித்திருந்தார்.
இது குறித்து பேசிய ஜனனி, தனக்கு இந்த வாய்ப்பை தந்த லோகேஷ் கனகராஜுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் தளபதி விஜய்யுடன் நடித்தது நம்பமுடியாத ஒன்றாக இருக்கிறது. முதல் படமே கனவு நினைவானது மாதிரி ஒன்று நடந்திருக்கிறது என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
நாடுகளில் வசூல்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், திரிஷா, கௌதம் மேனன், ப்ரியா ஆனந்த், மிஷ்கின், மன்சூர் அலிகான், அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் லியோ. இந்த படத்துக்கு இசை அனிருத், ஒளிப்பதிவு மனோஜ் பரமஹம்சா, படத்தொகுப்பு ஃபிலோமின் ராஜ்.
மாஸ்டர் திரைப்படத்துக்கு பிறகு இரண்டாவது முறையாக விஜய்யுடன் இணைந்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த படமும் கைதி - விக்ரம் யூனிவர்ஸில் இருக்குமா இல்லையா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிகப் பெரிய அளவில் எழுந்துள்ளது. இதனால் இந்த படத்துக்கு விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற ரசிகர்களும் ஆர்வமாக காத்திருந்தார்கள்.
இலங்கையில் முதல் நாளில் 5 காட்சிகளுக்கும் சேர்த்து கிடைத்த வசூல் 5 கோடி என்கிறார்கள். இலங்கை நாட்டு ரூபாய்க்கு 5 கோடி வசூல் கிடைத்திருக்கிறது. இது இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 1.5 கோடி ரூபாய் வரும் என்கிறார்கள். இதேபோல இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா என குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு முந்தைய படங்களின் சாதனைகளை முறியடித்துள்ளது லியோ.
மற்ற மாநிலங்களிலும் வரவேற்பு
முதல் நாள் முதல் காட்சி தொடங்கி, இரவு வரை பலர், திரும்ப இரண்டாவது முறை பார்த்து ரசிக்கும் வகையில் இந்த படம் இருந்தது. தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸுக்காக இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். இதுமட்டுமின்றி பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களிலும் இந்த படத்துக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்து வருகின்றது.
படம் நல்ல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி அதோடு விட்டுவிடாமல் நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கிறது. படத்தில் விஜய்யின் நடிப்பு, திரிஷாவின் அழகு, அர்ஜூன், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி ஆகியோரின் நடிப்பு வெகுவாக பாராட்டுகளைப் பெற்று வருகின்றன.
படத்தில் ஏகப்பட்ட சர்ப்ரைஸ் தருணங்கள் இருப்பதாக படம் பார்த்தவர்கள் கூறி வருகின்றனர். படம் எல்சியூவில் இருக்கிறதா இல்லையா என்பதை ரசிகர்கள் பார்த்து தெரிந்துகொள்ளட்டும் என விட்டுவிட்டார்கள். படத்தில் கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத் ஆகியோருக்கு மிகவும் வலிமையான கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.