பிக் பாஸ் 7 மாயாவுக்கு கடுமையான எச்சரிக்கை!

பிக் பாஸ் 7 மாயாவுக்கு கடுமையான எச்சரிக்கை!

Update: 2023-12-25 12:30 GMT

பிக்பாஸில் விதியை மீறி நடந்துகொண்டதாக மாயாவுக்கு பிக்பாஸ் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். மாயாவின் செயல்களால் எரிச்சலடைந்துள்ள ரசிகர்கள் அவர் விளையாட்டாக நடக்கிறேன் என்று, சிறுபிள்ளைத் தனமாக நடந்துகொள்கிறார் என கடுமையாக திட்டி பதிவிட்டு வருகின்றனர்.

ஏற்கனவே மாயா, பூர்ணிமா, ஜோவிகா என பலர் சேர்ந்து புல்லி கேங்க் என்று பெயர் பெற்றனர். மேலும் அவர்கள் கேங்கில் சேரும் ஒவ்வொருவராக வெளியே சென்று கொண்டும் இருந்தனர். ஜோவிகா கடைசி வரை வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரையும் மக்கள் வெளியேற்றினர். 

விஜய் டிவி புராடக்ட்  என்பதால் இந்த முறை அர்ச்சனா  இறுதி சுற்று வரையிலும் பிக்பாஸ் வீட்டில் இருப்பார் என்று கூறப்படுகிறது. அவருக்கு பெண்களின் ஆதரவு கிடைத்துள்ள நிலையில், சீரியல் பார்க்கும் ரசிகர்களால் அவர் நிச்சயம் இந்த பிக்பாஸ் இறுதி போட்டியாளர்கள் பட்டியலில் இடம்பெறுவார் என்கிறார்கள்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக எலிமினேட் ஆகி வெளியேற, இந்த வாரம் விக்ரம் வெளியேறினார். ஓவர் கான்பிடன்ஸாக கமல்ஹாசனின் உயரத்தைத் தாண்ட வேண்டும் என கூறி அனைவரையும் சிரிக்க வைத்தார். பிக்பாஸ் எனும் பெரிய வாய்ப்பையே அவர் சரியாக பயன்படுத்திக்கொள்ளாமல் வெளியே செல்கிறார் என்பதே பலரது கருத்தாக இருந்தது.

வீட்டினரிடம் விடைபெற்றுக் கொண்டு அவர் வெளியேறும் போது, மாயா வெளியே எட்டிப் பார்த்து பேச முயற்சித்தார். இதனை கண்ட பிக் பாஸ் மாயாவுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.

விக்ரம் வெளியேறும் போது, மாயா அவரிடம் பேசாமல் ஒதுங்கி இருந்தார். விக்ரம் வெளியே சென்ற பிறகு, மாயா வெளியே எட்டிப் பார்த்து பேச முயற்சித்தார். இதனை கண்ட பிக் பாஸ், "மாயா, நீங்க வெளியே எட்டிப் பார்க்கக் கூடாது. அது விதிமீறல். மீண்டும் இப்படி செய்தால், உங்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்தார்.

மாயாவின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. மாயா விதிமீறி நடந்து கொண்டார் என்று ரசிகர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே உள்ளாடை பற்றி பேசி கேலி செய்தது, பிரதீப்பை வேண்டுமென்றே புகார் அளித்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார் என இருக்கும் புகார்களினால் மாயா மீதான வெளிப் பார்வை தவறாகவே கணிக்கப்பட்டு வருகிறது. மேலும் கேம் கேம் என்று சொல்லிக் கொண்டே கோள்மூட்டி விடுதல், சண்டையைத் தூண்டி விடுதல் உள்ளிட்டவற்றை செய்து வருகிறார் மாயா என பிக்பாஸ் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மாயாவின் செயல் பற்றி ரசிகர்கள் கருத்து:

"மாயாவின் செயல் மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. அவர் விதிமீறி நடந்து கொண்டுள்ளார். அவருக்கு தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும்"

"மாயாவின் செயல் மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவர் விக்ரமிடம் பேசவில்லையே என்று கோபத்தில் இப்படி செய்திருப்பார் என்று நினைக்கிறேன்"

"மாயாவுக்கு விதிமீறல் செய்யும் பழக்கம் இருக்கிறது. அவர் முன்பும் பல முறை விதிமீறல் செய்துள்ளார்"

இப்படி ரசிகர்கள் மாயாவின் செயலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இனி இந்த வாரம் நாமினேசனில் மாயா சிக்கினால் அவ்வளவுதான் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Tags:    

Similar News