பிக்பாஸ் 7ல் இவர்கள்தான்.... வெளியானது போட்டியாளர்களின் பெயர்கள்...!

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்கப் போகும் போட்டியாளர்கள் பெயர்கள் தெரியவந்துள்ளது.

Update: 2023-09-26 02:23 GMT

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ இந்த பிக்பாஸ். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் ஒரு வீட்டுக்குள் பல செலிபிரிட்டிகளை அடைத்து வைத்து அவர்களின் கோபம், தாபம், மகிழ்ச்சி, துன்பம், நல்ல குணங்கள், கெட்ட குணங்கள் என எடுத்துரைப்பதுதான் நிகழ்ச்சியின் நோக்கம்.இதன்மூலம் சமுதாயத்திலிருக்கும் மக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட பகுதியாக அவர்களை பார்க்கலாம்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்று பலரும் ரசிகர்களாக இருக்கின்றனர். இதுவரை ஆறு சீசன்கள் நடந்து முடிந்திருக்கின்றன. முதல் சீசனிலிருந்தே இந்நிகழ்ச்சியின் டிஆர்பி உச்சத்தில்தான் இருக்கும். தொலைக்காட்சியில் மட்டுமல்ல, ஓடிடியிலும் இந்த நிகழ்ச்சிக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் குவிந்து வருவார்கள்.

பிக்பாஸ் 7: இரண்டு வீடுகளில்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஏழாவது சீசனில் விரைவில் தொடங்கவிருக்கிறது. இந்த முறை இரண்டு வீடுகளில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான அறிவிப்பில் கமல்ஹாசன் ரெட்டை வேடத்தில் வந்து கலக்கினார். பிக்பாஸ் புரோமோவே வேற லெவலுக்கு ரீச் ஆனது. கமல்ஹாசனின் நடிப்பு திறனை ஒரு டிவி தொடரின் விளம்பரம்தானே என அவர் நிறுத்தவில்லை.

பிக்பாஸ் 7 போட்டியாளர்கள்

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த முறை யார் யார் கலந்து கொள்ள போகிறார்கள் என்பதை ரகசியமாக வைத்திருக்கின்றனர். ஆனால் அந்த ரகசியம் மெல்ல மெல்ல கசிந்து வருகிறது.

நடிகை தர்ஷா குப்தா, மௌனராகம் சீரியல் மூலம் பிரபலம் அடைந்த நடிகை ரவீனா, நடிகை வனிதா விஜயகுமாரின் மகளான ஜோவிகா, பாண்டியன் ஸ்டோர் சீரியல் கதிர் (குமரன்), ரோபோ சங்கர் மகள் இந்திரஜா, நடிகை நிலா (அன்பே ஆருயிரே), நடிகை நிவிஷா, பிரபல மாடல் அனன்யா, ரோஷினி ஹரிப்ரியன், தொகுப்பாளினி ஜாக்லின், உமாரியாஸ் கான், ஸ்ரீதேவி விஜயகுமார், யுவன் பாலாஜி, நடிகர் அப்பாஸ், செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், சத்யா சீரியல் நடிகர் விஷ்ணு, ரக்ஷன், மாகாபா ஆனந்த், பப்ளு பிரித்விராஜ், விஜே அர்ச்சனா என மொத்தம் 21 பிரபலங்களின் பெயர் அதில் இடம் பிடித்திருக்கிறது.

மேற்கூறியவர்களுடன் இன்னும் இரண்டு பேர் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது. விஜே பாவனா மற்றும் கிராமிய பாடகி ராஜலட்சுமி ஆகியோரும் கலந்துகொள்ளவிருக்கிறார்களாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இரண்டு வீடுகளில் நடக்கும் புதிய சீசன் ரசிகர்களுக்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News