துடி துடித்து விழுந்த விக்ரமன், பதறிய சக போட்டியாளர்கள்..
Bigg Boss Tamil 6 Today Promo-பிக் பாஸ் 6 இந்த வார பிரமோவில் வீட்டில் இருக்கும் விக்ரமன் துடி துடித்து விழுகிறார். இதற்கு காரணம் சென்ற வாரம் கமலின் அட்வைஸா?
Bigg Boss Tamil 6 Today Promo -பிக் பாஸ் வீட்டை அந்த டிவி, இந்த டிவி சேனலாக மாற்றிவிட்டனர். இந்நிலையில் அந்த டிவி வழங்கும் பிபி டேலண்ட் ஷோ குறித்த ப்ரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் ஜனனி டான்ஸ் ஆடுகிறார். அமுதவாணனோ சிவாஜி கணேசன் பட வசனம் பேசுகிறார். பேஷன் ஷோ நடக்கிறது.
ஆனால் இதையெல்லாம் விட பிரமோவின் இறுதியில் விக்ரமன் துடித்து விழுந்து கிடக்கிறார். இது என்ன டாஸ்க் என நமக்குள் கேள்வி எழுகிறது.
ஆனால், ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது, ப்ரொமோ எல்லாம் நல்லாத் தான் இருக்கு. ஆனால் நிகழ்ச்சி அந்த அளவுக்கு சுவாரஸ்யமாக இல்லை. இந்த வார டாஸ்க் ரொம்ப போர் அடிக்கிறது. ஏதாவது விளையாட்டு டாஸ்க் கொடுத்து போட்டியாளர்களை மோத விடுங்கள் பிக் பாஸ் என்கிறார்கள் பார்வையாளர்கள்.
இதில் விக்ரமன் விழுந்து கிடப்பது மேன்ஹோல்களை சுத்தம் செய்யும் பணியின்போது விஷவாயு தாக்கி இறப்பது போல ஒரு கதை என்று தெரிகிறது. சென்றவாரம் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது குறித்து கமல் பேசினார். அதன் விளைவாக இந்த டாஸ்க் இருக்குமோ என தோன்றுகிறது.
விக்ரமனின் நடிப்பு பற்றி ஒரு பார்வையாளர் ட்விட்டர் பதிவில், விளம்பரத்தின் கடைசி பகுதி. விக்ரமன், ரசிதா ஸ்கிட் . உண்மையில் அந்த சில வினாடிகளே என்னை உணர்ச்சிவசப்படுத்தியது. முழு காட்சியை காண காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்
அசல் வெளியே சென்ற பிறகு நிவாஷினி ரிலாக்ஸாக, சந்தோஷமாக இருப்பது போன்று தெரிகிறது. இந்த வாரம் ஆயிஷாவை வெளியேற்றுங்கள். ராம், ராம்னு ஒருத்தர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தாரே, அவர் என்னய்யா செய்றார் என பார்வையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது குறித்து ஒரு பார்வையாளர் ட்விட்டரில் தங்களின் திறமையை வெளிப்படுத்த பிக்பாஸ் நல்ல நிகழ்ச்சி. பிக்பாஸ் வீட்டுல என்ன தான் பண்ணுனிங்க னு யாரவது கேட்டா இந்த சூட் மட்டும் தூங்குபவன் ஒன்னும் செய்யாதுன்னு சொல்லலாம். இந்த ஷோலயும் பெர்ஃபார்மென்ஸ் பண்ணல உங்கள யாராலயும் காப்பாத்த முடியது மிக்சர் விருது உங்களுக்கு தகுதியானது என கூறியிருக்கிறார்
பிக் பாஸ் 6 போட்டியாளரான ராபர்ட் மாஸ்டரை மிக்சர் மாமா என்று அழைக்கிறார்கள் பார்வையாளர்கள். வீட்டில் இவ்வளவு விஷயம் நடந்தாலும் இந்த ராபர்ட் மாஸ்டர் மட்டும் ஒன்னும் செய்யாமல் ஓரமாக இருக்கிறாரே. வேலையே செய்ய மாட்டாரா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
கடந்த 3 வாரங்கள் இதுவரை பிக்பாஸ் தமிழின் சிறந்த 3 வாரங்களாக இருந்தன, ஆனால் இந்த வார டாஸ்க் அனைத்தையும் கெடுத்து விட்டது, உடல்ரீதியான போட்டிகளை தயவுசெய்து நடத்துங்கள் என சிலர் பதிவிட்டுள்ளனர்வருகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2