பாக்கியலட்சுமி சீரியல் முடிய போகுது..! இதுதான் கடைசி எபிசோடாம்!
விரைவில் இந்த தொடரும் நிறைவு பெறும் என்று கூறப்படுகிறது.;
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே அதிக நாட்கள் ஓடிய பட்டியலில் இடம்பிடிக்கும் சீரியலாக இது நீண்ட நாட்களாக ஒளிபரப்பாகி வருகின்றது. ஆனால் சமீப நாட்களில் இந்த கதை சிறப்பாக செல்லாத நிலையில், சீரியலை முடிவுக்கு கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு வங்க மொழியில் தொடங்கப்பட்ட ஸ்ரீமோயி சீரியலின் தமிழ் ரீமேக்தான் இந்த பாக்கியலட்சுமி. இந்த தொடர் கன்னடம், மராத்தி, மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, ஒடியா என பல மொழிகளிலும் ரீமேக் ஆகி வருகின்றது. அதில் தமிழில் வெளியாகும் பாக்கியலட்சுமி இன்னும் சிறப்பாக இருக்கிறது.
கோபி, பாக்யா, ராதிகா என முக்கோண கதையாக செல்லும் இந்த தொடரில், சமீபத்தில் இனியா பிரச்னையை வைத்து கோபி ஒரு சண்டை போட அது பெரிதாக ஆகாமல் புஷ்ஷென முடிந்துவிட்டது. இந்நிலையில் இந்த தொடர் விரைவில் முடிவுக்கு வரும் என தெரிகிறது. காரணம் மலையாள மொழியில் வெளியான குடும்பவிளக்கு தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. கிட்டத்தட்ட 5 மொழிகளிலும் இந்த தொடர் நிறைவடைந்துவிட்டது.
இந்தி, மராத்தி, தமிழ் ஆகிய மூன்றிலும் இப்போதும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. விரைவில் இந்த தொடரும் நிறைவு பெறும் என்று கூறப்படுகிறது.