Bhagyaraj interview about Ayodhya Movie: மந்திரமூர்த்தி கிட்ட எதோ மந்திரம் இருக்கு, அயோத்தி படம் பற்றி பாக்யராஜ்
அயோத்தி திரைப்படம் எல்லோரும் வாழ்நாளில் ஒருமுறையாவது சந்திக்கும் ஒரு விஷயத்தைப் பற்றியது என பாக்யராஜ் கூறியுள்ளார்;
பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர் ரவீந்திரன், சசிகுமார் நடிப்பில் மந்திர மூர்த்தி இயக்கத்தில் உருவாகும் 'அயோத்தி' என்று பெயரிடப்பட்ட புதிய திரைப்படத்தை தயாரிக்கிறார்.
இந்தப்படம் குறித்து நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் வெகுவாக பாராட்டியுள்ளார்
பாக்யராஜ் கூறும்போது, என்னோட படங்களை டிவில அடிக்கடி பாக்கும்போது, புதுசா பாக்குற மாதிரி இருக்குன்னு சொல்றாங்க அதைக் கேட்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. அந்த சந்தோஷம் அந்த திருப்தி அந்த மன நிறைவு அயோத்தி என்கிற ஒரே ஒரு படத்தின் மூலமா நிச்சயமா கிடைக்கும்
எல்லோரும் வாழ்நாளில் ஒருமுறையாவது சந்திக்கும் ஒரு விஷயத்தைப் பற்றியது இந்தப் படம். இந்த கதையோடு மக்கள் அவர்களை எளிதில் தொடர்பு படுத்திக்கொள்ள முடியும். நாம் வாழும் உலகின் மறுபக்கத்தைக் காட்டும் உணர்ச்சிகரமான ஒரு கதை இது. நான் டைரக்டர் மந்திரமூர்த்தி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுதான் அவரோட முதல் படம் அப்படிங்கும் போது, இவர் மேல நம்பிக்கை வச்சு இப்படி ஒரு கதை, இதுல கமர்சியல் என்ன அப்படி எதையும் பாக்காம இது ஒரு நல்ல கதை, இது ஒரு நல்ல சினிமாவா வந்தா நான் நிச்சயமா ஜனங்க கிட்ட ஒரு பேரு வரும் ஒரு மரியாதை இருக்கும் அப்படின்னு பீல் பண்ணி இப்படி ஒரு கதையை செலக்ட் பண்ணி, அந்த வாய்ப்பை கொடுத்த ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பாளர் ரவீந்திரன் அவருக்கு மனமார்ந்த நன்றி. முதல் படம் பண்ண மாதிரியே இல்ல. இந்தப் படம் அவ்வளவு நிறைவா வந்து இருக்கு
இந்த படத்தை பத்தி சொல்ல ஒரே ஒரு ஷாட் போதும், இந்தப் படத்தை ரியலிஸ்டிகா நான் எடுத்துருக்காங்க. ஆர்ட் டைரக்டரில் இருந்து மியூசிக் டைரக்டரில் இருந்து கேரக்டர் எல்லாருமே சேர்ந்து அந்த ஷாட்டை எடுத்தது பிரமாதமா பண்ணியிருந்தாங்க. பையன காணோம் அப்படின்னு மார்ச்சுவரில போய் தேடுவாங்க. அந்தத் தேடுற இடத்துல இருக்கக்கூடிய அந்த அட்மாஸ்பியர் ரியலா ஒரு மார்ச்சுவரி எப்படி இருக்குமோ, பிணம் வாங்க காத்துக்கொண்டிருக்கிறவர்கள், பிணத்தை பார்த்து அழுபவர்கள், அங்கு வேலை பாக்குறவங்க இது எல்லாத்தையும் அவ்ளோ ரியலிஸ்டிக்கா எடுத்திருக்காங்க
இந்த மாதிரி இந்த படத்துல ஒவ்வொரு ஷாட்டுமே நல்லாருக்கு. ஸ்க்ரீன் பிளேயும் அந்த அளவுக்கு பண்ணியிருக்காங்க. ஆரம்பத்துல ஒரு ஷாட்டில் அதை காட்டுவாங்க இந்தப் படத்தோட கடைசில எப்படி லிங்க் ஆகுது அப்படிங்கிறதுக்கு உண்டான ஸ்கிரீன் பிளே அருமையா பண்ணி இருப்பாங்க. இந்தப் படத்துல இது போல எவ்வளவோ சிறப்புகள். இந்த படத்தை பாருங்க அப்பத்தான் உங்களுக்கு என்னனு தெரியும். இத சொல்றத விட இதன் நேர்ல போய் பாருங்க அப்போ புரியும் உங்களுக்கு
சசிகுமார் ஒரு அனுபவப்பட்ட நடிகர். அவருக்கு ஏத்த மாதிரி அவருக்கு கேரக்டர் கொடுத்து இருக்காங்க. அவரும் சிறப்பா நடிச்சி இருக்காரு. அதுமட்டுமல்ல அவர் கூட நடிச்சவங்களும் அவ்ளோ பிரமாதமா நடிச்சிருக்காங்க.
எவ்வளவோ படம் நடிச்சிருக்கேன், எவ்வளவோ டைரக்ட் பண்ணி இருக்கேன். ஆனா இந்தப் படத்தை பார்க்கிறப்ப இந்தப் படத்தை பார்க்கும்போது மந்திரமூர்த்தி கிட்ட ஏதோ ஒரு மந்திரம் இருக்கு அப்படின்னு தோணுது என்று கூறினார்
கலை- துரைராஜ்
படத்தொகுப்பு- சான் லோகேஷ்
நடனம்- ஷரீப்
சண்டைக்காட்சிகள்- பிரபு
மக்கள் தொடர்பு- நிகில் முருகன்
நிர்வாக தயாரிப்பாளர்- தினேஷ் கண்ணன்
தயாரிப்பு நிர்வாகி- செல்வம்-அஷ்ரப்
தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் சக்தி ரூபிணி-ஜெயராம்
இப்படத்தை ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி மந்திரமூர்த்தி இயக்கியுள்ளார்