1947 movie review in tamil ஆகஸ்ட் 16, 1947 படம் எப்படி இருக்கு?

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததை அறியாத திருநெல்வேலி பகுதியிலுள்ள மலையடிவார கிராம மக்கள் தங்கள் சுதந்திரத்துக்காக போராடும் கதையே படமாக்கப்பட்டுள்ளது.

Update: 2023-04-08 15:00 GMT

கௌதம் கார்த்திக் நடிப்பில் அறிமுக இயக்குநர் பொன்குமார் இயக்கி ஏ ஆர் முருகதாஸ் தயாரித்து வெளிவந்த படம் ஆகஸ்ட் 16, 1947. ஏ ஆர் முருகதாஸின் உதவியாளராக பணிபுரிந்த பொன்குமார் இந்த படத்தின் மூலம் நம்மை சுதந்திர போராட்ட காலத்துக்கே கொண்டு சென்றுவிட்டார். இந்த படத்தின் டிரைலரே ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை உண்டாக்கியிருந்தது. இதனால் படம் வெளியான நாளே படத்தைக் காண பலர் திரையரங்கு சென்றதை பார்க்கமுடிந்தது. அதுமட்டுமின்றி 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் திரையரங்குக்கு படையெடுத்தனர் ரசிகர்கள்.

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததை அறியாத திருநெல்வேலி பகுதியிலுள்ள மலையடிவார கிராம மக்கள் தங்கள் சுதந்திரத்துக்காக போராடும் கதையே படமாக்கப்பட்டுள்ளது.

கதைச்சுருக்கம் | August 16, 1947 story

திருநெல்வேலி அருகே செங்காடு எனும் மலைக் கிராமம் ராபர்ட் கிளைவ் எனும் வெள்ளைக்காரரிடம் அடிமைப் பட்டுக் கிடக்கிறது. ராபர்ட் கிளைவின் மகன் ஜஸ்டின் தான் பார்க்கும் பெண்கள் அனைவரையும் பாலியல் வன்கொடுமை செய்யும் கொடூரனாக இருக்கிறான்.

கிராம மக்கள் வெள்ளைக்காரனுக்கு அடிமையாக தினமும் 16 மணி நேரம் வேலை செய்கின்றனர். சிறுநீர் கூட வெள்ளைக்காரன் உத்தரவிட்டால் மட்டுமே கழிக்க முடியும் எனும் கொடுமையும் நடக்கிறது.

ஆகஸ்ட் 15ம் தேதி 1947ம் ஆண்டு நள்ளிரவில் இந்தியாவுக்கு சுதந்திரம் அளிக்க முடிவு செய்தது பிரிட்டிஷ் அரசாங்கம். ஆனால் குறிப்பிட்ட கிராமத்தில் இருந்து அடுத்த 30 ஆண்டுகளுக்கு வரி கிடைக்கும் என்பதால் இந்த கிராமத்து மக்களுக்கு இந்த சுதந்திரத்தைப் பற்றி தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

இவர்களுக்கு சுதந்திரம் கிடைத்தது தெரிந்ததா, இவர்கள் போராடி சுதந்திரம் பெற்றார்களா என்ன நடந்தது என்பதுதான் கதை.

படம் எப்படி இருக்கு | Padam eppadi irukku

கௌதம் கார்த்திக்கை சுற்றிதான் படத்தின் கதை நிகழ்கிறது. அவனுடைய சிறுவயது காதலி, அவளுக்கு வரும் பிரச்னை, அதற்காக அவளின் தந்தை எடுத்த முடிவு, கதாநாயகியைக் காப்பாற்றி கதாநாயகன் என்ன செய்கிறான் என கதையை கொஞ்சம் சுற்றி வளைத்திருப்பது படத்துக்கு மைனஸாக மாறியுள்ளது.

புகழ் ஏற்று நடித்த கதாபாத்திரத்துக்கு உண்மையாக இருந்திருக்கிறார். அப்படியே ஒரு உண்மையான ஒருவரைக் கண் முன் கொண்டு வந்திருக்கிறார். வில்லனாக ராபர்ட் கிளைவ் கதாபாத்திரத்தில் நடித்தவர் பின்னி பெடலெடுக்கிறார்.

பின்னணி இசை ரசிகர்களைக் கவர்கிறது. படத்தின் வேகத்தை குறைக்கவில்லை என்பது ஆறுதல். ஆனால் திரைக்கதையிலேயே தொய்வு உருவாகிறது. இதனால் பாடல்கள் இல்லாமலே எடுத்திருக்கலாமே என்பது போல தோன்றுகிறது. 

Tags:    

Similar News