அடையாளமே மாறிப்போன அதுல்யா.. போட்டோ வைரலால் ரசிகர்கள் அதிர்ச்சி
Athulya Ravi Images - அடையாளமே மாறிப்போன நடிகை அதுல்யா ரவியின் போட்டோ வைரலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.;
Athulya Ravi Images - தமிழ்த்திரையுலகில் 'காதல் கண் கட்டுதே' படத்தில் அறிமுகமாகி, தொடர்ந்து 'நாடோடிகள்2', 'முருங்கைக்காய் சிப்ஸ்' என பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் நடிகை அதுல்யா ரவி. குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்து அவர், தற்போது கவர்ச்சியின் பக்கம் திரும்பியுள்ளார்.
சமீபகாலமாகவே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு வருவதால், அதுல்யா ரவிக்கு ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. தற்போது நடிகர் சிபிராஜின் 'வட்டம்' படத்தில் இணைந்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில், அதுல்யா ரவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இந்த புகைப்படத்தில் அவர் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளது தான் அதற்கு காரணம். சில ரசிகர்கள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து விட்டீர்களா என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் இதற்கு அவர் எந்த பதிலையும் அளிக்கவில்லை.
சினிமா நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தங்களுடைய முகத்தை மாற்றிக்கொள்வது வழக்கமான விஷயம் தான் என்றாலும், தற்போது அந்த வரிசையில் அதுல்யாவும் சேர்ந்து விட்டாரா என தெரியவில்லை. அவர் வெளியிட்டுள்ள அந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.