ஷாரூக்கானுக்கும், தயாரிப்பாளருக்கும் இடையில் முழிக்கும் அட்லீ
Shah Rukh Khan New Movie-ஷாருக்கானுக்கு பதான், டன்கி, ஜவான் படங்கள் தான் அடுத்தடுத்து வர உள்ளன. இதில் ஜவான் படத்திற்கு அதிக ஹைப் உள்ளது.
Shah Rukh Khan New Movie-இயக்குனர் அட்லீ பிகில் படத்திற்கு பிறகு பாலிவுட் சூப்பர் ஸ்டார் சாருக்கானுடன் இணைந்து 'ஜவான்' என்னும் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கிறார்.
நயன்தாராவிற்கு இது முக்கியமான திரைப்படம். விக்னேஷ் சிவன் உடனான திருமணத்திற்கு பிறகு நயன்தாரா நடிக்கும் முதல் திரைப்படம் இது. மேலும் நயன்தாரா முதன் முதலில் பாலிவுட் ஹீரோவுடன் படம் பண்ணுகிறார். இந்த படம் வெற்றியடைந்தால், நயன்தாரா பாலிவுட்டிலும் ஒரு வலம் வர அதிக வாய்ப்புள்ளதால் அவர் இந்த படத்தை மிகவும் நம்பி இருக்கிறார்.
விஜய் சேதுபதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பேட்டை படத்தில் வில்லனாக நடித்தார். அதன் பிறகு மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்தார். விக்ரம் திரைப்படத்தில் உலக நாயகன் கமலஹாசனுக்கு வில்லனாக நடித்திருப்பார். தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்கவிருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகி விட்டன.
Atlee new movie name-ஷாருக்கானுக்கு கடந்த நான்கு வருடங்களாக ஹிட் படங்கள் ஏதுமில்லை. அவரின் கடைசி படங்களான ஜப் ஹரி மேட செஜல், ஸீரோ திரைப்படங்கள் தொடர்ந்து பிளாப் ஆகிவிட்டன. இப்போது ஷாருக்கானுக்கு பதான், டன்கி, ஜவான் படங்கள் தான் அடுத்தடுத்து வர உள்ளன. இதில் ஜவான் படத்திற்கு அதிக ஹைப் இருப்பதற்கு காரணம் இயக்குனர் அட்லீயின் அடுத்தடுத்த வெற்றி படங்களே.
அட்லீ தன்னுடைய முதல் படமான ராஜா ராணிக்கு பிறகு, அடுத்தடுத்த படங்கள் நடிகர் விஜயுடன் தான் பணியாற்றினார். தெறி, மெர்சல், பிகில் என தளபதி விஜயுடன் ஹாட்ரிக் படங்களை கொடுத்தார். இந்த படங்கள் அனைத்துமே வெற்றியடைந்தன. பல ஆண்டுகளுக்கு பிறகு அட்லீ விஜயை தவிர்த்து வேறு நடிகருடன் பண்ணும் முதல் படம் என்பதால் அவருக்கும் இது முக்கியமான படமே.
ஆனால் அட்லீக்கு சோதனை காலம் போல், மும்பையில் மழை கொட்டி தீர்த்து கொண்டிருக்கிறது. இதனால் அங்கு படப்பிடிப்பை தொடர முடியாமல் படக்குழு சென்னை வந்து விட்டது. இங்கு சென்னை வந்த ஷாருக்கான் மற்ற தொழிலாளர்களிடம் எந்த பாகுபாடும் காட்ட கூடாது என்பதற்காக அனைவருக்கும் ஒரே சாப்பாடு, AC ரூம் என ஓவராக போகிறாராம். இதனால் தயாரிப்பாளர்கள் பயங்கர கடுப்பில் உள்ளார்களாம். இதனால் இயக்குனர் அட்லீ ஷாரூக்கானையும் சமாளிக்க முடியாமல், தயாரிப்பாளர்களையும் எதிர்கொள்ள முடியாமல் விழி பிதுங்கி இருக்கிறாராம்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2