அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் வாழ்த்து பெற்ற அச்சம் தவிர் படக்குழு
அச்சம் தவிர் படக்குழுவினர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் வாழ்த்து பெற்றனர்.
அகில இந்திய அளவில் குறும்பட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் அச்சம் தவிர் என்ற தமிழ் குறும்படம் அகில இந்திய அளவில் மூன்றாம் இடத்தை பெற்றது. கடந்த வாரம் டெல்லியில் நடந்த விழாவில் அச்சம் தவிர் படகுழுவினருக்கு விருது வழங்கப்பட்டது.
டெல்லியில் தேசிய விருது பெற்ற அச்சம் தவிர் பட குழுவினர் சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் பாஸ்கரனை (தலைவர் தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம்) அவருடைய அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்வில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளர் விஜயகார்த்திகேயன் ஐ.ஏ.எஸ். தேசிய விருது பெற்ற அச்சம் தவிர் படக்குழுவை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்
இதனை தொடர்ந்து தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர். மேலும் தமிழ்நாடு அரசின் சட்ட ஆட்சி மொழி ஆணைய உறுப்பினர் நீதிபதி முகமது ஜியாவுதீனையும் படக்குழுவினர் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.
இந்நிகழ்வில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவனர் தலைவர் ஆர்.கே.குமார் பொதுச்செயலாளர் முனைவர் வி. எச்.சுப்பிரமணியம் மாநில மகளிர் பிரிவு தலைவர் லதா அர்ஜுனன், படத்தின் இணை இயக்குனரும் நடிகரும் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியுமான ஆர்.ஏ.தாமஸ், படத்தின் இயக்குனரும், திருப்பூர் மாவட்ட செயலாளருமான குமார் தங்கவேல், ஒளிப்பதிவாளர் யாசின் மற்றும் நஸீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.