நடிகர்-இயக்குநர் ஆர் பார்த்திபனின் வெற்றிப்பயணத்தில் மற்றுமொரு மைல்

இரவின் நிழல் படத்திற்கு ஆஸ்கார்-கிராமி விருது பெற்ற ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்;

Update: 2022-04-13 02:28 GMT

ஆர் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தை முதல் நான்-லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்துள்ளன

நடிகர்-இயக்குநர் ஆர் பார்த்திபனின் வெற்றிப்பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லாக, அவரது இரவின் நிழல் படத்தை முதல் நான்-லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்துள்ளன


தமிழ் சினிமாவின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கவுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு முன்னதாக இந்த கவுரவம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இரவின் நிழல் படத்திற்கு ஆஸ்கார்-கிராமி விருது பெற்ற ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகாரம் கிடைத்தது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பார்த்திபன், தனது தனித்துவமான முயற்சியை அங்கீகரித்த இரு அமைப்புகளுக்கும் நன்றி தெரிவித்தார்.


@arrahman @onlynikil #NM

Similar News