நடிகர் அசோக் செல்வனை மணக்க இருக்கும் நடிகை யார் தெரியுமா?
அசோக் செல்வனை மணக்க இருக்கும் நடிகை யார் என தற்போது தகவல் பரவி வருகிறது.
நடிகர் அசோக் செல்வனுக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டதாகவும், மணமகள் பிரபல நடிகைதான் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. திருமணம் ஆவணி மாதம் முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது என்றும் கூறப்படுகிறது. யார் அந்த நடிகை தெரியுமா?
அசோக் செல்வன் 2007 ஆம் ஆண்டு சூதுகவ்வும் படத்தில் அறிமுகமானார். பின்னர் தெகிடி, ஓ மை கடவுளே, மன்மதலீலை, போர்த் தொழில் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர்.
அசோக் செல்வன் கடைசியாக சரத்குமாருடன் சேர்ந்து போர்த்தொழில் படத்தில் நடித்திருந்தார். சிறப்பான நடிப்பால் அசத்தியிருந்தார் படம் வேற லெவலுக்கு பேசப்பட்டது. இந்த படத்துக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இவருக்கு இப்போது திருமணம் உறுதி ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது காதலியை மணக்க இருப்பதாக கூறப்படுகிறது. அவரது காதலி வேறு யாருமில்லை. நடிகர் அருண் பாண்டியனின் இளைய மகளான கீர்த்தி பாண்டியன்தான்.
நடிகர் அருண் பாண்டியனுக்கு மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். 90களில் ஆக்ஷன் மன்னனாக இருந்த இவருக்கு 3 மகள்கள் இருக்கிறார்கள். மூத்த மகள் கவிதா, இரண்டாவது மகள் கிரணா இருவருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது.
இந்நிலையில், அருண் பாண்டியனின் 3வது மகள் கீர்த்தியுடன் அசோக் செல்வன் காதலில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர் என்றும், ஒன்றாக ஊர் சுற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.
மிகவும் ரகசியமாக வைத்திருக்கும் இந்த தகவல் நெருங்கிய வட்டாரத்திலிருந்து கசிந்துள்ளது. ஆவணி முதல் வாரத்தில் இருவருக்கும் திருமணம் திட்டமிடப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இதுவரையிலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.