பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட மன்மத குஞ்சு அசல் கோலார்
bigg boss asal kolaar, bigg boss tamil season 6பிக்பாஸ் வீட்டில் மன்மத குஞ்சு போல் வலம் வந்த அசல் கோலார் கமல்ஹாசனால் வெளியேற்றப்பட்டார்.
bigg boss asal kolaar, bigg boss tamil season 6உலக நாயகன் கமல்ஹாசன் விஜய் தொலைக்காட்சியில் நடத்தி வரும் பிக் பாஸ் சீசன் 6 பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஒரு மாத கால ஒளிபரப்பை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஒரு மாத காலத்தில் நிகழ்ச்சி ஹிட்டாக தான் சென்று கொண்டிருக்கிறது என ரசிகர்கள் பரபரப்பாக பேசிக் கொள்கின்றனர். அந்த வகையில் அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி தொடங்கிய இந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சி நேற்று வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமையை சந்தித்தது. இந்த வார இறுதியில் யார் வெளியேற்றப்படுவார்கள் என்ற கேள்வி பலமாக இருந்தது/
bigg boss asal kolaar, bigg boss tamil season 6வெளியேற்றப்படும் லிஸ்டில் அசிம் மற்றும் அசல் கோலார் ஆகிய இருவரும் இருந்தனர். இதில் யார் காப்பாற்றப்படுவார் யார் வெளியேற்றப்படுவார் என்ற கேள்வி எழுந்த போது அசல் கோலார் தான் உள்ளே இருப்பார் என்று பலர் கூறினார்கள்.குறிப்பாக நிவாஸினி அசல் கோலார் கண்டிப்பாக இங்கு இருக்க வேண்டும் என கூறினார். இந்த நிலையில் அசல் கோளாறு பிக் பாஸ் கமலஹாசன் முன் நிறுத்தப்பட்டார்.
bigg boss asal kolaar, bigg boss tamil season 6அசல் கோலாரை வெளியே அனுப்பும் முன்பு கமல் ஒரு விஷயம் சொன்னார். எதற்காக இங்கே நிறுத்திட்டாங்க என கேட்டீங்க வெளியே போய் உங்க நண்பர்களிடம் கேளுங்க. சொல்லுவாங்க என கூறி அவரை வெளியேற்றினார். பிக் பாஸ். நிகழ்ச்சி தொடங்கிய நாளில் இருந்து அசல் கோலார் எல்லை மீறி நடந்து கொண்டதாக ரசிகர்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் வந்தன. குறிப்பாக சக பெண் போட்டியாளர்களை கட்டித் தழுவியது, முத்தம் கொடுத்தது, முதுகில் தடவியது என அவருடைய செயல்கள் உண்மையிலேயே அவர்ஒரு கோளாறான ஆளு தான் போல் என ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது. இது பற்றிய புகார்கள் பிக் பாஸ் கமல்ஹாசனுக்கும் சென்றது. அதன் விளைவாகவே மன்மத குஞ்சு போல் வலம் வந்து கொண்டிருந்த அசல்கோலார் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார். அவரை வெளியேற்றியதற்கான காரணத்தை கமல் மறைமுகமாக கூறி வெளியேற்றி இருக்கிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே பிரபல யூடியுபர் ஜி.பி. முத்து, சாந்தி ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர். இதில் ஜி.பி.முத்து தனது சொந்த பிரச்சினை அதாவது மகனுக்கு உடல் நலம் இல்லை என்ற காரணத்தை கூறி வெளியேறினார். இதனை தொடர்ந்து தற்போது மூன்றாவதாக அசல்கோலார் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்