Arun Vijay செய்த செயலால் ஆடிப் போன SK ரசிகர்கள்! டிவிட்டரில் புகழ்ச்சி!

நடிகர் அருண்விஜய் மாவீரன் படத்தைப் பார்த்துவிட்டு டிவிட்டரில் எழுதியதைப் படித்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.;

Update: 2023-07-19 04:08 GMT

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இயக்குநரான மடோன் அஸ்வின் தேசிய விருது பெற்ற மண்டேலா படத்தைத் தொடர்ந்து தனது இரண்டாவது படமாக சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் கடந்த வாரம் வெளியாகி ஒரு சிலரின் எதிர்மறை கருத்துகள் இருந்தாலும் பலருக்கு பிடித்திருந்தது. படம் நல்ல விமர்சனத்தை பெற, குழந்தைகளும் இளைஞர்களும் படத்தைத் தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன், சரிதா, மிஷ்கின், சுனில், அதிதி, யோகிபாபு என அனைவரது நடிப்பும் பாராட்டத்தக்க வகையில் அமைந்திருந்தது. மடோன் அஸ்வினின் இயக்கத்தில் படம் நல்ல விமர்சனத்தை பெற சினிமா செலிபிரிட்டிகளும் படத்தைப் பற்றி பாசிடிவாக எழுதி வருகின்றனர். இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் ரசிகர்களே எதிர்பாராத வகையில் அருண் விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு டிவிட்டை பதிவிட அனைவரும் ஆடி போய்விட்டனர். அவரது டிவிட்டர் கணக்குக்கு படையெடுத்து வருகின்றனர். இதோ அவரின் டிவீட்



மாவீரன் படத்தைப் பார்த்தேன். முழுமையான மகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்தேன். சகோதரர் சிவகார்த்திகேயன் நீங்க உங்க கதாபாத்திரத்த பிரமாதமா பண்ணிருந்தீங்க. ரொம்ப பிடிச்சிருந்தது. யோகிபாபுவின் காமெடி, விஜய்சேதுபதி சகோவின் குரல் என படம் முழுவதும் பிடித்திருந்தது. இயக்குநர் மடோன் அஸ்வினுக்கு பாராட்டுகள். மொத்த குழுவுக்கும் பாராட்டுகள். சிறப்பான வேலைப்பாடு என்று பாராட்டியுள்ளார்.

இதனை சற்றும் எதிர்பாராத சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அவரது டிவிட்டர் வலைத்தளத்துக்கு சென்று அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரது அடுத்த படங்கள் வெற்றி பெறவும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயனுக்கும் அருண்விஜய்க்கும் சில ஆண்டுகளுக்கு முன் மறைமுகமாக முட்டிக்கொண்டது. நீ எல்லாம் ஒரு மாஸ் ஹீரோவா?. யார் எல்லாம் மாஸ் காண்பிப்பது என்று ஒரு விவஸ்தை இல்லாமல் போச்சு. தமிழ் ஆடியன்சுக்கு தெரியும். திறமைக்கு மட்டும் தான் மதிப்பு கொடுப்பார்கள் அருண் விஜய் பொத்தம்பொதுவாக ஒரு டிவீட் போட, அதை கண்டிபிடித்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அவர் மீது பாய்ந்தனர். அப்போது தனது டிவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக சொல்லி, அந்த பதிவை நீக்கியிருந்தார்.


இதற்கு பதிலடியாக மிஸ்டர் லோக்கல் படத்தில் காமெடி காட்சியை வைத்திருந்தார் சிவகார்த்திகேயன். அதில் வர வர யார்தான் ஆக்ஷன் பண்றதுனு விவஸ்தை இல்லாம போயிடிச்சி என்று சதீஷ் சொல்ல, அதற்கு சிவகார்த்திகேயன் என்ன டார்லிங் என்று கேட்க, என் வாய யாரோ ஹேக் பண்ணிடாங்க டார்லிங் என்று சதீஷ் சொல்வார். இப்படியாக அந்த காமெடி காட்சி கலாய்த்து வைக்கப்பட்டிருக்கும்.

இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக சிவகார்த்திகேயன் அருண் விஜய் மகன் அர்னவ் பிறந்த நாளின்போது வாழ்த்து தெரிவித்திருந்தார். மேலும் அவர் நடிப்பில் வெளியான ஓ மை டாக் படத்தை பற்றியும் அர்ணவின் நடிப்பு பற்றியும் பாராட்டி பேசியிருந்தார். அப்போதே அருண்விஜய்யும் சகோதரர் என அழைத்து அந்த பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டார்.

இருந்தாலும் இப்போதுதான் அருண் விஜய் நேரடியாக சிவகார்த்திகேயனின் நடிப்பைப் பாராட்டி பேசியுள்ளார். 

Tags:    

Similar News