அரண்மனை 3 திரைப்படம் எப்படி - நம்பி தியேட்டருக்கு போகலாமா?

அரண்மனை - 1, அரண்மனை -2 படம் வரிசையில் அடுத்து வந்திருக்கும் அரண்மனை -3 படம் குறித்த திரை விமர்சனம்.

Update: 2021-10-15 06:15 GMT

அவ்னி சினிமேக்கர்ஸ், பென்ஸ் மீடியா தயாரிப்பில், சுந்தர் சி இயக்கத்தில், ஆர்யா, ராஷிகண்ணா, சுந்தர் சி நடிப்பில் வெளியாகி இருக்கிறது அரண்மனை -3. அரண்மனை - 1, அரண்மனை -2 படம் வரிசையில் அடுத்து வந்திருக்கும் படம், அரண்மனை -3 . ஒருவரியில் கதையை சொல்வதானால், தன்னையும், தன்து காதலன் மற்றும் மகளை கொன்றவர்களை பெண் பேய், பழிவாங்குகிறது.

ஜமீன்தார் சம்பத், தனது மகள், அக்கா, தங்கையுடன் அரண்மனையில் வசிக்கிறார். அங்கு பேய் இருப்பதாக மகள் கூற, அதை நம்பாமல், படிப்பதற்காக மகளை ஹாஸ்டலுக்கு அனுப்பி, படிக்க வைக்கிறார். சம்பத் மகள் ராஷி கண்ணா, தன்னை வளர்த்த டிரைவரின் இறுதிச்சடங்கிற்காக ஊருக்கு வருகிறார். அப்போதும், அந்த அரண்மனையில் பேய் இருப்பதை பார்க்கிறார்.

அதன் பின்னர், திடீர் திருப்பங்கள், அதிர்ச்சிகர சம்பவங்கள் அரங்கேறுகின்றன. டிரைவரின் மரணத்துக்கு யார் காரணம், பேய் பழி வாங்கியதா, பேயை எப்படி விரட்டுகிறார்கள் என்பதே மீதிக்கதை.

முதல் இரண்டு படங்களில் இருந்த சுவாரஸ்யம், இதில் இல்லை. காட்சி வித்தியாசமோ, கதை வித்தியாசமோ, வேறு புதுமையோ இதில் இல்லை. கொஞ்சம் காமெடி, நிறைய கிராபிக்ஸ், ஆண்ட்ரியாவின் நடிப்பு மட்டுமே படத்திற்கு கொஞ்சம் பக்கபலமாக உள்ளன.

கதாநாயகன் ஆர்யாவுக்கு நடிப்பதற்கான வாய்ப்பு குறைவு. மற்றவர்கள் தான், அதிக நேரம் வந்து செல்கிறார்கள். கடைசி படத்தில் நடித்த நடிகர் விவேக்கையும், இயக்குனர் வீணடித்திருக்கிறார். பேய் படம் என்றாலே யோகிபாபு, மனோபாலா வந்துவிடுகிறார்கள். சுந்தர் சி படம் என்றால், காமெடி இருக்கும்; இப்படத்தின் காமெடிகளோ, ஓரளவுதான் சிரிக்க வைக்கிறன. சிரிப்பு நடிகர் பட்டாளம் இருந்தும் சிரிப்பு வரவில்லை.

ஒரு ஃபார்முலா வெற்றி பெற்றுவிட்டால், அதையே லாஜிக்கை மறந்து, பொழுபோக்க நினைப்பவர்கள், அரண்மனை-3 ஐ பார்க்கலாம். மொத்தத்தில், அரண்மனை -3 தூசிபடிந்த பங்களா.

Tags:    

Similar News