இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் மகளுக்கு திருமணம்

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் மகளுக்கு மிகவும் சிம்பிளாக திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது

Update: 2022-01-02 16:02 GMT

ஏ ஆர் ரஹ்மான் மற்றும் அவரது மகள்

இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.  ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழி படங்களுக்கும் இசையமைத்து உள்ளார். மேலும், இரண்டு ஆஸ்கர் விருதை குவித்து தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தவர்.

ஏ ஆர் ரஹ்மான் கடந்த 1995 ஆம் ஆண்டு சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்துகொண்டார். அமீன் என்ற மகனும், கதீஜா ரகுமான், ரெஹிமா ரகுமான் என்ற இரு மகள்களும் உள்ளனர்.

தனது 20 வயதில் இருக்கும் கதிஜா ரஹ்மான், இன்ஸ்டாகிராமில், சவுண்ட் இன்ஜினியரான மொஹமத் உடன் இருக்கும் படத்தொகுப்பைப் பகிர்ந்துள்ளார்.

இருவருக்கும் டிசம்பர் 29ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. எளிய முறையில் நடந்த இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். மணமகன் பெயர் ரியாஸ் . திருமண தேதியை இன்னும் அறிவிக்கவில்லை.

பெரும்பாலும் ஏர் ஆர் ரஹ்மான் ஏ ஆர் ரஹ்மான் தன் பிள்ளைகளைமீடியா கண்களுக்கு காட்டுவது இல்லை. இருப்பினும் இவரது மகள் கதீஜா கடந்த 2020 அம ஆண்டு சமூக வலைதளத்தில் பேசு பொருளாக இருந்தார். ஏ ஆர் ரஹ்மானின் இரண்டு மகள்களில் கதீஜா, தன் தந்தையை போல இஸ்லாம் மதத்தை கடுமையாக கட்டிப்பிடித்து வருபவர். மேலும், இவர் எங்கு சென்றாலும் புர்கா அணியாமல் சென்றது இல்லை.

Tags:    

Similar News