பிரிட்டிஷ் கவுன்சிலின் கலாசார தூதராக ஏ.ஆர்.ரஹ்மான்... ஆஸ்கர் நாயகனின் அடுத்த உயரம்..!

AR Rahman News Today -இசைப்புயல் ஏ,ஆர்.ரஹ்மானை பிரிட்டிஷ் கவுன்சிலின் கலாசார தூதராக நியமித்துள்ளது பிரிட்டிஷ் கவுன்சில்.;

Update: 2022-06-10 02:08 GMT

ஏ.ஆர்.ரஹ்மான்.

AR Rahman News Today - இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ்த்திரையுலகில் இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் 1992-ம் ஆண்டு இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் கவிதாலயா திரைப்பட நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான 'ரோஜா' திரைப்படத்தின் மூலம் இளம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரும் கவனிக்கத்தக்க இசையை ரசிகர்களுக்கு வழங்கி இசையுலகில் குறிப்பிடத்தகுந்த இசையமைப்பாளராக தடம் பதித்தார்.

மேலும், முதல் படத்திலேயே தேசிய விருது பெற்று அனைவரையும் வியக்க வைத்தார் என்பது தமிழ்த்திரையுலகின் குறிப்பிடத்தகுந்த வரலாற்றுப்பதிவு. அடுத்தடுத்து பிரபல இயக்குநர்களின் ஆஸ்தான இயக்குநராகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பிறமொழிப் படங்களுக்கும் இசையமைத்து இந்திய அளவில் புகழ்பெற்றார். அதன் அடுத்தகட்டமாக ஹாலிவுட்டிலும் தடம் பதித்து உலகளவில் ரசிகர்களைப் பெற்று மேலும் புகழின் உயரத்தை அடைந்தார்.

இளைய வயதிலேயே உலகெங்கிலும் உள்ள இசை உள்ளங்களில் இசை நாயகனாக அகலாத ஆசனமிட்டு அமர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான் 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்று புகழின் உச்சம் தொட்டார். ஆஸ்கர் விருது வழங்கப்பட்ட மேடையில், விருது பெற்றதும், 'எல்லாப் புகழும் இறைவனுக்கே..!' என்று உள்ளத்தின் அடிஆழத்திலிருந்து உணர்ச்சிப்பொங்க அவர்தம் உதடுகளில் ஓங்கி உச்சரித்தார். இதன்மூலம் தனது இறைநம்பிக்கையையும் தாய்த்தமிழையும் உலக அரங்கில் பரவலாக வெளிப்படுத்தினார். அத்துடன், தமிழை உலகளவில் அடையாளப்படுத்திய பெருமைக்கு வித்திட்டார்.

அடுத்தடுத்து தனது பாராட்டத்தக்க இசையால் புகழ் மற்றும் வெற்றிகளை தொட்டுத் தொடர்ந்து உயர்ந்து வரும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அவருடைய புகழ் மகுடத்தின் மேலும் ஒரு சிறப்பாக பிரிட்டிஷ் கவுன்சிலின் புதிய கலாசார நிகழ்வின் தூதுவராக நியமனம் செய்துள்ளது பிரிட்டிஷ் கவுன்சில். இதனையொட்டி கலை சார்ந்த புதிய நிகழ்வை டெல்லியில் 08/06/2022 அன்று பிரிட்டிஷ் கவுன்சில் தொடங்கியது. இந்த நிகழ்வில் தான் கலந்துகொள்ள இயலவில்லை எனினும் ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ காலிங் வழியாக பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தார். 


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News