நடிகர் சிலம்பரசனை வைத்து புதிய படம் இயக்கப்போகும் ஏ.ஆர்.முருகதாஸ்

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நாயகனாக நடிக்க உள்ள படம் பற்றி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.;

Update: 2022-11-21 10:23 GMT
நடிகர் சிலம்பரசன், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் நடிகர் விஜய் நாயகனாக நடிக்கவிருக்கும் திரைப் படத்தை இயக்கவிருந்த நிலையில், அதிலிருந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் திடீரென அதில் இருந்து விலகினார். நடிகர் விஜய் - இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருந்த படம்தான் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில், 'பீஸ்ட்'டாக வெளிவந்தது. அதன்பின்னர், எந்தத் திரைப் படத்தையும் இயக்காமல் இருந்து வந்த இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், அடுத்து ஒரு பிரமாண்ட திட்டத்துடன் கம்பேக் கொடுக்கத் தயாராகிவிட்டார்.

நடிகர் விஜய் நடிக்கவிருந்த திரைப் படத்தை கைவிட்ட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், தான் அறிமுகம் ஆனதில் இருந்து அதிகப்படியான சூப்பர் ஹிட் படங்களை அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். நடிகர் அஜித் குமாரின் 'தீனா' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஏ.ஆர்.முருகதாஸ், அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தார். 'ரமணா', 'கஜினி', 'துப்பாக்கி', 'கத்தி' என ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தவரான இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் 'ஸ்பைடர்', 'சர்கார்', 'தர்பார்' படங்களின் தோல்வியால் சற்றுத் தடுமாறினார்.

இறுதியாக, நடிகர் விஜய்யின் 65வது படத்தை இயக்க கமிட்டாகி இருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருந்த இந்தப் படம் தொடங்கும் முன்பே ட்ராப் ஆனது. பின்னர், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்குப் பதிலாக நடிகர் விஜய்யுடன் இயக்குநர் நெல்சன் இணைய, அதுவே, 'பீஸ்ட்' படமாக உருவானது. விரைவில் கம்பேக் கொடுக்க முடிவு செய்து, அதன் பின்னர் பல முன்னணி நடிகர்களுக்கு கதை சொன்ன இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு படங்கள் எதுவும் அமையவில்லை. இதனால் அமைதியாக இருந்த அவர், தற்போது தரமான கதை ஒன்றை முடித்துவிட்டாராம். Phantom எனும் VFX கம்பெனியின் தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை அனிமேஷன் தொழில்நுட்பத்தில் இயக்க முடிவு செய்துள்ளாராம் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். கதை, திரைக்கதை, ப்ரீ-புரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே நடிகர்கள் அஜித் குமார், விஜயகாந்த், சூர்யா, விஜய், ரஜினி காந்த், தெலுங்கில் சிரஞ்சீவி, மகேஷ் பாபு, இந்தியில் அமீர்கான் என டாப் ஹீரோக்களுடன் இணைந்துள்ளார் ஏ.ஆர். முருகதாஸ். இந்தநிலையில், முதன்முதலாக நடிகர் சிலம்பரசனுடன் கூட்டணி வைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அனிமேஷன் தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்க சிலம்பரசனுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். மேலும், விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் படம் அனிமேஷனில் உருவாகவுள்ளது உறுதியாகியுள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்தப் படம் சூப்பர் ஹீரோ கான்செப்ட்டில் இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 'மாநாடு', 'வெந்து தணிந்தது காடு' படங்கள் மூலம் கம்பேக் கொடுத்துள்ள சிலம்பரசன், அடுத்து, 'பத்து தல' திரைப் படத்தில் நடித்து வருகிறார். சிலம்பரசனின் மார்க்கெட் சூடு பிடித்துள்ளதால், அவரை சூப்பர் ஹீரோவாக்கி அழகு பார்க்க இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags:    

Similar News