அண்ணாத்த பட விவகாரம்: கோர்ட்டுக்கு போன சன் பிக்சர்ஸ்

ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தை, சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;

Update: 2021-10-29 07:30 GMT

அண்ணாத்த படத்தில் ஒரு காட்சி.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கி, சூப்பர் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம், 'அண்ணாத்த'. இப்படத்தில், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். டி. இமான் இசையமைப்பில் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அண்ணாத்த திரைப்படம், வரும் நவம்பர் 4ஆம் தேதி, தீபாவளியன்று தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.

இதடனிடையே, சன் பிக்சர்ஸ் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில், அண்ணாத்த படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. படத்தை இணையதளங்களில் வெளியிட்டால், தங்களுக்கு பெரும் இழப்பு உண்டாகும் என, சன் பிக்சர்ஸ் தரப்பில் கூறப்பட்டது.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், அண்ணாத்த திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்கள் மற்றும் இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.

Tags:    

Similar News