அண்ணாத்த படக்குழுவின் அறிவிப்பால் குஷியில் ரசிகர்கள்
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் டீசர், வரும் ஆயுதபூஜையன்று மாலை வெளியாகும் என்று, படக்குழுவினர் அறிவித்திருப்பது, ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது.;
இந்த ஆண்டு தீபாவளி, ரஜினி ரசிகர்களுக்கு 1000 வாலா கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தீபாவளியன்று ரஜினியின் அண்ணாத்த படம் வெளியாவதே இதற்கு காரணம். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், டி. இமான் இசையில் ரஜினி நடித்துள்ள இப்படத்தில், நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றது. எஸ்.பி.பி. வாய்ஸில் ரஜினிக்கான அறிமுகப்பாடல், பட்டி தொட்டியெங்கும் ஒலித்து வருகிறது. அடுத்து வந்த நயன்தாராவுடனான ரொமான்ஸ் பாடலும் பரவலாக ரசிக்கப்பட்டு வருகிறது.
இதனால் உற்சாகத்தில் உள்ள படக்குழுவினர், அண்ணாத்த படத்தின் டீசரை ஆயுத பூஜையன்று, அதாவது அக்டோபர் 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால், ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.