பிக்பாஸ் 6-ல் அஞ்சனா ரங்கன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Bigg Boss Tamil Contestants - பிக்பாஸ் 6-ல் விஜே அஞ்சனா ரங்கன் போட்டியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.;

Update: 2022-09-08 07:50 GMT

Bigg Boss Tamil Contestants -விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவான 'பிக் பாஸ்' நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்சியாகும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களை நல்ல முன்னேற்றப்பாதையில் விஜய் டிவி நிர்வாகம் கொண்டு செல்ல வழிவகையும் செய்கிறது.

இந்நிலையில், பிக்பாஸ் 5வது சீசன் முடிந்து, தற்போது 6வது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இந் சீசனையும் வழக்கம்போல் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

anjana rangan bigg boss

இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக யார் யார் கலந்துகொள்வார்கள் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரசிகர்கள் எதிர்பார்க்காத தகவலாக 'பிக் பாஸ்-6' நிகழ்ச்சியில் பிரபலங்கள் மட்டுமல்ல சாமானிய மக்களும் கலந்து கொள்ளலாம் என விஜய் டிவி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், பிக்பாஸ் 6 வது சீசனில் விஜே அஞ்சனா ரங்கன் போட்டியாளராக கலந்துகொள்வாதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் 'மிஸ் சின்னத்திரை 2008' – போட்டியாளராக கலந்துகொண்டு வெற்றிபெற்றுள்ளார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News