தென்னிந்தியாவை கலக்குறமாதிரி... அனிருத் சொன்ன சஸ்பென்ஸ்! என்னவா இருக்கும்?

தென்னிந்தியாவையே கலக்கும் வகையிலான ஒரு அப்டேட்டை விரைவில் வெளியிட இருப்பதாக இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-11 12:56 GMT

தென்னிந்தியாவையே கலக்குறமாதிரி ஒரு கொலாப்ரேசன் என அனிருத் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அது குறித்த முழுத் தகவல்களையும் நாளை வெளியிடுவதாக தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியாவின் ராக்ஸ்டார் அனிருத் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் பல படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவரது இசையில் அஜித், விஜய், சூர்யா, கமல்ஹாசன், ரஜினிகாந்த் என முன்னணி நடிகர்களின் படங்கள் வரிசைக்கட்டி வருகின்றது. தெலுங்கிலும் நானி, என்டிஆர் உள்ளிட்ட இளம் நடிகர்களின் படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார் அனிருத்.

இந்நிலையில், அவ்வப்போது இசைக் கச்சேரிகளையும் பிரம்மாண்டமாக நடத்தி வரும் அனிருத் அதுகுறித்த அறிவிப்பை வித்தியாசமாக வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின்படி, நாளை அவர் அந்த தகவலை வெளியிடுவார் என்று கூறியுள்ளார்.




Tags:    

Similar News

கொடி (2016)
எல்கேஜி (2019)
சர்கார் (2018)
ஜோக்கர் (2016)