இவர்தான் அவர்... காதலை அறிவித்த இளம் நடிகை!

அம்மு அபிராமி இளம் இயக்குநர் ஒருவரை காதலிப்பதாக கடந்த ஆண்டு ஒரு தகவல் வெளியானது.;

Update: 2024-06-11 09:43 GMT

தான் காதலிப்பதை வெளிப்படையாக அறிவித்துள்ளார் பிரபல இளம் நடிகை அம்மு அபிராமி. ராட்சசன் படம் மூலம் குழந்தையாக அறிமுகமான அபிராமி, தற்போது காதலிப்பது ஒரு பிரபல இளம் இயக்குநர் என்பதும் தெரியவந்துள்ளது.

ராட்சசன் படத்தில் விஷ்ணு விஷால் அக்கா மகளாக, அழகான பள்ளிப் பெண்ணாக நடித்து அசத்தியிருப்பார். அவருக்கும் விஷ்ணு விஷாலுக்கும் இடையேயான காட்சிகள் மிகச் சிறப்பாக வந்திருக்கும். அனைவரும் ரசிக்கும் வகையில் இந்த காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.

அம்மு அபிராமி இளம் இயக்குநர் ஒருவரை காதலிப்பதாக கடந்த ஆண்டு ஒரு தகவல் வெளியானது. ஆனால் அது யார் என்பது தெரியாமல் இருந்தது. இந்நிலையில், அவரே இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில், இருவரும் இணைந்து நிற்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

தனுஷ் ஜோடியாக அசுரன் படத்தில் நடித்திருந்தார் அம்மு அபிராமி. அந்த படத்துக்கு தேசிய விருதும் கிடைத்திருந்தது. இந்த படம் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. இதனைத் தொடர்ந்து, துப்பாக்கி முனை, யானை, தண்டட்டி, பாபா பிளாக்ஷீப் உள்ளிட்ட சில திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான கண்ணகி இவருக்கு நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத் தந்தது. அந்த படத்தில் 4 நாயகிகளுள் ஒருவராக நடித்திருந்தார். கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும் அம்மு அபிராமி நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது.

தற்போது நிறங்கள் மூன்று, ஜகதாம்பாள், கனவு மெய்ப்பட, குதூகலம், கோலி சோடா 1.5 என கைவசம் பல படங்கள் இருக்கின்றன.

சமீபத்தில் விஜய் டிவியில் பிரபல ரியாலிட்டி ஷோவாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார் அம்மு அபிராமி. அந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பார்த்திவ் மணியை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. இதனை உறுதிப் படுத்தும் வகையில் இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஹேப்பியஸ்ட் பர்த்டே டியர், பிறந்ததற்கு நன்றி, வாழ்வில் வந்ததற்கு நன்றஇ என்று பதிவிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் காதலில் இருக்கிறீர்களா என கேட்டு கமெண்ட் செய்து வருகின்றனர். விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இயக்குநராக இருந்த பார்த்திவ் மணி, விஜய் தொலைக்காட்சியிலிருந்து வெளியேறி, தற்போது சன்டிவியில் டாப் குக்கு டூப்பு குக்கு நிகழ்ச்சியை இயக்கி வருகிறார்.

Tags:    

Similar News