ஆல்யா மானசா வீட்டோட மதிப்பு இத்தனை கோடியா?
ஒரு நாள் ஷூட்டிங்குக்கு 20 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை சம்பளமாக கொடுக்கப்பட்டது;
சின்னத்திரை நடிகை ஆல்யா மானசாவின் வீட்டின் மதிப்பு மட்டும் 1.8 கோடி ரூபாய் என்று தற்போது தெரியவந்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி தொடர் மூலம் மிகப்பெரிய பிரபலமானவர் ஆல்யா மானசா. இவர் அந்த தொடரில் அவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இரண்டு குழந்தைகளுடன் தற்போது மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருகிறார்.
இரண்டாவது குழந்தை பிறந்தபோது விஜய் தொலைக்காட்சியிலிருந்து விலகி சன்டிவியில் இணைந்தார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் நாயகியாக நடித்து வருகிறார் ஆல்யா. இதேபோல சஞ்சீவ் சன்டிவியில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் நாயகனாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் இணைந்து சென்னையில் மிகப்பெரிய வீடு ஒன்றைக் கட்டியுள்ளனர். இதன் மதிப்பு மட்டும் சில கோடிகள் என்று தெரியவந்துள்ளது. ஆலியாவின் வீடு சந்தை மதிப்பில் 1.8 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தான் கொடுத்த பேட்டியில் மனம் திறந்துள்ளார் ஆலியா மானசா. ஒரு சின்ன வீட்டில் நாங்கள் அனைவரும் கஷ்டப்பட்ட வாழ்ந்து வந்தோம். இப்போது எங்கள் ஆசைப்படி வீடு வாங்கி இருக்கிறோம். இந்த வீடு 1.8 கோடி மதிப்பு கொண்டது. இது முழுக்க முழுக்க லோனில் கட்டியது என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டு இனியா தொடரில் நடிக்க ஆரம்பிக்கும்போது ஒரு நாள் ஷூட்டிங்குக்கு 20 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை சம்பளமாக கொடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ள ஆல்யா, தற்போது ஒரு நாளைக்கு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை சம்பளம் பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.