அஜித்துக்கு முன்னாள் விஜய்யின் பெயர்... வெளியான ரகசியம்

vijay says to put his name front of ajith name - நடிகர் அஜித்தின் பெயருக்கு முன்னாள் தனது பெயரை பத்திரிகையாளரிடம் போடச்சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது.;

Update: 2022-10-29 06:29 GMT

vijay says to put his name front of ajith name - நடிகர் அஜித்தின் பெயருக்கு முன்னாள் தனது பெயரை பத்திரிகையாளரிடம் போடச்சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் பீஸ்ட் படத்துக்குப்பின், தெலுங்கு இயக்குனரான வம்சியின் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழில் படமாக்கப்பட்டு தெலுங்கில் டப் செய்யப்படுவதாக சமீபத்திய பேட்டியில் நடிகர் விஜய் தெரிவித்திருந்தார். இது விஜய் நடிக்கும் 66-வது படம். வாரிசு, 2023 பொங்கல் தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தன்னுடைய ரசிகர்களுக்கு எப்போதுமே ஆதரவாக இருந்து வருபவர் நடிகர் விஜய். தற்போது இலங்கையைச் சேர்ந்த கஜேந்திரா கே.ஆர்.எஸ் என்ற ரசிகர் நடிகர் விஜய் புகைப்படத்தை டிஜிட்டல் ஓவியமாக வரைந்துள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் முகப்புப் படமாக மாற்றியுள்ளார் நடிகர் விஜய்.

நடிகர் அஜித்தின் துணிவு படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டவுடன், நடிகர் விஜய் தன்னுடைய ரசிகரின் ஓவியத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் டிபி.,யாக வைத்துள்ளார். இந்த செய்தியும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

vijay news

இதுகுறித்து ஓவியம் வரைந்த ரசிகர், இந்த நாளை என்னாலும் மறக்கவே முடியாது. தான் ஒரு முறை தான் நீ பார்த்தால் அது வரமே. நன்றி தலைவா!" எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகர் அஜித்தின் துணிவு அப்டேட்டிற்கு பிறகு, அஜித் மற்றும் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மோதல் தொடர்ந்து பல வருடங்களாக இருந்து வருகிறது.

ஏற்கனவே இந்த மோதல் உச்சத்தில் நடந்துகொண்டிருக்கும் நிலையில் மேலும் அதிகரிக்க வருகிற பொங்கலுக்கு விஜய் - அஜித் இருவரின் படமும் வெளியாகிறது.

இந்த மோதல்கள் ஒருபுறம் இருந்து வரும் நிலையி்ல், சில வருடங்களுக்கு முன்னால் செய்தி அச்சு ஊடகங்களில் 'அஜித் - விஜய்' என்று தான் எழுதி வந்துள்ளார்கள். இதை கவனித்த விஜய், ஒரு முறை சில முக்கிய பத்திரிகையாளர்களை தன்னுடைய படப்பிடிப்புக்கு அழைத்து, இனி அஜித் - விஜய் என்று எழுதாதீர்கள், விஜய் - அஜித் என்று என்னுடைய பெயரை முன்னாடி எழுதுங்கள் என்று கேட்டுக்கொண்டாராம் விஜய். தற்போது இந்த தகவல் கசிந்ததால் சமூக வலைதளங்களில் இருவரின் ரசிகர்களிடையே இன்னும் மோதல்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே துணிவு படத்தின் வெளியீட்டு தேதி அறிவிககப்பட்டவுடன், நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் வெளியீடு தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் பரவி வருகிறது.

Tags:    

Similar News