அஜித் பட நிறுவனத்தால் அறிமுகமாகும் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர்! ஹீரோ யாரு?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார் நடித்து வரும் குட் பேட் அக்லி படத்தை தயாரிக்கிறது பிரபல பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ்.;
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார் நடித்து வரும் குட் பேட் அக்லி படத்தை தயாரிக்கிறது பிரபல பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் அறிமுகமாகிறார் பிரபல மலையாளத் திரைப்படமான மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இயக்குநரான சிதம்பரம்.
குணா படம் எடுக்கப்பட்ட கொடைக்கானல் குகையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். கேரள மாநிலத்திலுள்ள மஞ்சும்மல் எனும் கிராமத்திலிருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்து மாட்டிக்கொண்ட சில இளைஞர்களைப் பற்றிய கதைதான் இது. இந்த படத்தை பிரமாதமாக எடுத்து தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மாநில மொழி ரசிகர்களையும் கவர்ந்தார் இயக்குநர் சிதம்பரம். இவர் கமல்ஹாசனின் தீவிர ரசிகர் என்பதால் குணா படத்தை தமிழகத்திலும் மிகப் பெரிய அளவில் கமல்ஹாசன் ரசிகர்கள் விளம்பரப்படுத்தினர்.
படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசனையும் சந்தித்து ஆசி பெற்றார். அந்த சமயத்தில் இவர் கமல்ஹாசனை இயக்குவார் என்றும் தகவல் வெளியானது. அடுத்து ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்ட பிற நடிகர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றார். வழக்கம்போல ரஜினியுடன் படம் பண்ண போறார், தனுஷுடன் படம் பண்ண போறார் என செய்திகள் பரவின. இந்நிலையில், அவர் தற்போது அடுத்த படத்தை இயக்கவிருப்பது தெரியவந்துள்ளது. அதற்காக அவர் பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.
அட்டகாசமான கதை ஒன்றை வைத்திருக்கும் சிதம்பரம் அதில் யாரை கதாநாயகனாக வைத்து இயக்குவார் என பலரும் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருந்தனர். கமல்ஹாசன், ரஜினிகாந்த், தனுஷ் ரசிகர்கள் அவர்கள் நாயகர்களின் படத்தை இயக்குவார் என எதிர்பார்த்தனர். இந்நிலையில் தற்போது அவர் தனது புதிய திரைப்படத்தை விரைவில் அறிவிப்பார் என்று தகவல் கிடைத்துள்ளது.
அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தை தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சிதம்பரத்திடம் கதை கேட்டுள்ளது. அவரிடம் ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அநேகமாக இது தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் உருவாகும் திரைப்படம் என்று கருதப்படுகிறது.
இதனிடையே சமீபத்திய தகவல்களின்படி, சிதம்பரம் ஹிந்தி படம் ஒன்றை இயக்கவும் தயார் நிலையில் இருக்கிறாராம். பான் இந்தியன் படமாக உருவாகவும் வாய்ப்புள்ள இந்த திரைப்படத்தை தயாரிக்க பிரபல பாலிவுட் பட தயாரிப்பு நிறுவனமான பாந்தோம் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இந்த படம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழில் தனுஷிடம் கதை சொல்லி ஓகே வாங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வேறு வேறு கதைகளை வைத்திருக்கிறாரா அல்லது மூன்றும் ஒரே கதையா அதில் தனுஷ் தான் ஹீரோவாக நடிக்க போகிறாரா என்பது குறித்த தகவல்கள் எல்லாம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும்.