அஜித்- மகிழ் திருமேனி- லைக்கா கூட்டணியில் வரப்போகுது புதிய படம்

AK 62 Update, New Director Magizh Thirumeni, AK 62 Lyca Productionsஅஜித்- மகிழ் திருமேனி- லைக்கா கூட்டணியில் புதிய படம் வரப்போவதாக தகவல் கிடைத்து உள்ளது.;

Update: 2023-02-07 10:59 GMT

AK 62 Update, New Director Magizh Thirumeni, AK 62 Lyca Productionsஇயக்குனர் மகிழ் திருமேனி- நடிகர் அஜித்குமார்.

இயக்குனர் மகிழ் திருமேனியை இளைய தளமபதி விஜய் கைவிட்ட நிலையில் அஜித்குமார் -மகிழ் திருமேனி- லைக்கா  கூட்டணியில் புதிய படம் விரைவில் உருவாக போகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது.

AK 62 Update, New Director Magizh Thirumeni, AK 62 Lyca Productionsதமிழ் திரை உலக வட்டாரத்தில் இப்போது   பரபரப்பாக பேசப்படும் விஷயம் என்னவென்றால் மகிழ் திருமேனி மற்றும் அஜித் கூட்டணி இணைவது தான். ஏனென்றால் இதுவரை மகிழ்திருமேனி பெரிய நடிகர்களின் படங்களை இயக்கியது இல்லை. இப்படி இருக்கையில் அஜித் இவருக்கு ஏன் வாய்ப்பு கொடுத்தார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


AK 62 Update, New Director Magizh Thirumeni, AK 62 Lyca Productionsஅதாவது மகிழ்திருமேனி பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்கவில்லை என்றாலும் அவர் இயக்கிய அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கித் தந்தது. அதிலும் குறிப்பாக தடம் மற்றும் தடையற தாக்க படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டது.

AK 62 Update, New Director Magizh Thirumeni, AK 62 Lyca Productionsஇவ்வாறு அருண் விஜய் தமிழ் சினிமாவில் இப்போதும் நிலைத்து நிற்க மகிழ்திருமேனி ஒரு முக்கிய காரணமாக உள்ளார். அதுமட்டுமின்றி தளபதி விஜய்க்கு மகிழ் திருமேனி இரண்டு கதை சொல்லி இருக்கிறார். இந்த இரண்டு கதையுமே விஜய்க்கு ரொம்ப பிடித்து போய் விட்டதாம்.

AK 62 Update, New Director Magizh Thirumeni, AK 62 Lyca Productionsஆனால் அந்த சமயத்தில் உதயநிதியின் கலகத் தலைவன் படத்தை மகிழ் திருமேனி இயக்கிக் கொண்டிருந்தார். இந்த படம் சில நாட்கள் இழுத்தடித்துக் கொண்டே போனதால் விஜய்யின் படத்தை அவரால் இயக்க முடியாமல் போய்விட்டது. இந்தப் படத்தை முடித்த கையோடு விஜய்யிடம் சென்ற போது தளபதி அப்போது பிஸியாகிவிட்டார்.


AK 62 Update, New Director Magizh Thirumeni, AK 62 Lyca Productionsஆகையால் மகிழ்திருமேனி, விஜய் கூட்டணி தற்போது வரை அமையாமல் போனது. அதன் பிறகு தான் அஜித், விக்னேஷ் சிவன் கூட்டணி சமீபத்தில் பிளவு ஏற்பட்ட நிலையில் மகிழ் திருமேனி அஜித்திடம் கதை சொல்லி உள்ளார். கதையைக் கேட்டவுடன் அஜித்துக்கு மிகவும் பிடித்திருந்ததால் ஓகே சொல்லிவிட்டாராம்.

AK 62 Update, New Director Magizh Thirumeni, AK 62 Lyca Productionsஇப்போது அஜித், மகிழ் திருமேனி, லைக்கா கூட்டணி கிட்டதட்ட உறுதி ஆகி உள்ளது. அதுமட்டுமின்றி அட்வான்ஸ் தொகையையும் இயக்குனருக்கு லைக்கா கொடுத்துள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவலை இன்னும் சில தினங்களில் அறிவிக்க உள்ளனர்.

Tags:    

Similar News