விக்கி படத்துக்கு பிறகு, உலகம் சுற்றத் தயாராகும் 'ஆசை' நாயகன்

ajith latest news- பயணங்களில் அதிக விருப்பம் கொண்டவர் நடிகர் அஜீத். விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடித்த பிறகு, பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல தயாராகி வருகிறார்.;

Update: 2022-10-18 09:32 GMT

ajith latest news-நடிகர் அஜீத்குமார்

 ajith latest news, ajith latest news tamil, ajith latest movie- அஜீத் தற்போது, 'துணிவு' படத்தில் நடித்து வருகிறார். 'வலிமை' படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறாத நிலையில், 'துணிவு' படத்தில், தனது முழு கடின உழைப்பையும் வெளிப்படுத்தி, வேலை செய்து வருகிறார். வினோத் படத்தை தொடர்ந்து, அஜீத் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக, அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது.

இந்த படத்தை 'லைக்கா' நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்க உள்ளார். மேலும் அஜீத் சினிமாவில் இருந்து விலக, முன்பே யோசித்தார் என்ற தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் ரசிகர்கள் இதை விரும்ப மாட்டார்கள் என்பதற்காக மட்டுமே, தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.


அஜீத் மற்ற நடிகர்களை போல, பந்தா காட்ட மாட்டார். நல்ல பண்பாளர். வித்யாசமான சிந்தனையாளர். கார், பைக் பந்தயங்களில் ஆர்வமாக கலந்துகொள்பவர். சமீபத்தில், திருச்சியில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் ஆர்வமாக கலந்துகொண்டு வெற்றி பெற்றார். மற்ற நடிகர்களை போல பெயர், பணம், புகழ் சம்பாதிப்பதில் அதிக விருப்பம் இல்லாதவர். பொது இடங்களுக்கு வந்தால், பொதுமக்களோடு ஒருவராக கலந்து, அந்த இடத்துக்குரிய நிபந்தனைகளை பின்பற்றி, சாதாரணமான மனிதராக நடந்து கொள்வார். ஆடம்பரம், ஆரவாரம் காட்டாத மிக எளிமையான மனிதர் என்றெல்லாம் பலராலும் பாராட்டப்படுபவர்.

இந்த சூழ்நிலையில், விக்னேஷ் சிவன் படத்தை முடித்துவிட்டு அஜீத் முக்கிய முடிவு ஒன்று எடுத்துள்ளார். அதாவது அஜீத்துக்கு பைக் மற்றும் கார் ரேஸ் மீது அதிக ஆர்வம் இருப்பது எல்லோரும் அறிந்தது தான். மேலும், 'வலிமை' படத்தின் சூட்டிங் முடிந்த பிறகு, நடிகர் அஜீத் பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.


தற்போது, ஏகே 62 படத்தை முடித்துவிட்டு அஜீத் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. சினிமாவில் சாதித்த பிறகு, தனது கனவு உலகத்தை பைக்கில் சுற்றிவர வேண்டும் என்பது அஜீத்தின் ஆசை. அதற்கு இதுதான் சரியான நேரம் என்றும் அஜீத் முடிவு எடுத்துள்ளார்.

தற்போது அதை நிறைவேற்றுவதற்காக, கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டு இடைவெளி எடுத்து, 18 மாதங்களில் 7 கண்டம், 60 நாடுகள் ஆகியவற்றை மூன்று பேர் கொண்ட குழுவுடன், அஜீத் சுற்றிவர தயாராகி வருகிறார். எப்போதுமே அஜீத் நினைத்ததை நிறைவேற்றாமல் விடமாட்டார்.


இதனால் அஜீத் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஏனென்றால், ஒன்றரை ஆண்டுகளுக்கு அஜீத் சினிமாவில் இல்லை என்றால், அது மிகப் பெரிய வேதனையை அவரது ரசிகர்களுக்கு ஏற்படுத்தும். மேலும் அஜீத் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பி வரும் போது, சினிமா எப்படி இருக்கும் என்பது, அவருக்கே புதுமையாக இருக்கும்.

Tags:    

Similar News