தயாநிதி அழகிரியுடன் அஜித் குடும்பத்தினர்: வைரலாகும் புகைப்படம்
மு.க. அழகிரியின் மகன் தயாநிதியுடன் அஜித் குடும்பத்தினர் இருக்கும் படம், சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.;
அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார், வெள்ளை நிற தாடி, தலைமுடியுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். இயக்குநர் வினோத் தயாரிப்பில் எடுக்கப்பட்டு வரும் சினிமா ஒன்றுக்காக, நடிகர் அஜித்குமார் இந்த கெட்- அப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மு.க.அழகிரியின் மகனும் தயாரிப்பாளருமான தயாநிதி அழகிரி, தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் அஜித் குமார், அவரது மனைவி ஷாலினியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அத்துடன், "சும்மாவா சொன்னாங்க அல்டிமேட் ஸ்டார்னு. அவர் நமது அருகில் இருப்பதால் உண்டாகும் உணர்வை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது" என கூறியுள்ளார். அந்த புகைப்படத்தில், அஜித், அவரது மனைவி ஷாலினி, மகள் அனுஷ்கா, தயாநிதி அழகிரி மற்றும் அவரது மனைவியும் உள்ளனர்.
இந்த படத்தை, அஜித் ரசிகர்களும், நடிகர் தயாநிதியின் ரசிகர்களும், சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.