விஜய்யுடன் நடிக்க மறுத்த உலக அழகி! அஜித்துக்கு ஓகே.. அதிர்ந்த தயாரிப்பாளர்!

தளபதி விஜய்யுடன் நடிக்க மறுத்த உலக அழகி பட்டம் பெற்ற நடிகை, அஜித்துடன் நடிப்பதென்றால் ஓகே என்று கூறியிருக்கிறார். இது விஜய்யின் பட தயாரிப்பாளரை தூக்கி வாரிப் போட்டிருக்கிறது. இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.;

Update: 2023-04-19 16:12 GMT

தளபதி விஜய்யுடன் நடிக்க மறுத்த உலக அழகி பட்டம் பெற்ற நடிகை, அஜித்துடன் நடிப்பதென்றால் ஓகே என்று கூறியிருக்கிறார். இது விஜய்யின் பட தயாரிப்பாளரை தூக்கி வாரிப் போட்டிருக்கிறது. இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

தமிழ் சினிமாவில் எதிரும் புதிருமாக ரசிகர்களைக் கொண்டிருப்பவர்கள் அஜித்குமாரும், விஜய்யும். இவர்கள் இருவரும் ஒரே காலக்கட்டத்தில் நடிக்க தொடங்கி இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருக்கின்றனர். இவர்கள் படம் வரும்போதுதான் தீபாவளி, பொங்கல் எனும் அளவுக்கு இவர்களது ரசிகர்கள் படத்தை கொண்டாடி வெற்றி பெற வைக்கின்றனர்.

விஜய், அஜித் இருவரும் போட்டி போட்டு புது புது நடிகைகளுடன் ஜோடி போட விருப்பம் தெரிவிப்பவர்கள். டிரெண்டுக்கு ஏற்ற நடிகைகளுடன் நடிக்க விரும்புவார்கள். அது அவர்களின் பட வியாபாரத்துக்கு பெரிய உதவியாக இருக்கும் என நம்புபவர்கள். சிம்ரன், ஜோதிகா, அசின், நயன்தாரா என பல முன்னணி நடிகைகள் இருவருடன் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். விஜய் படத்தில் நடித்தால் உடனே அந்த நடிகையை அஜித் தன் படத்தில் நடிக்க வைப்பதும், அஜித் படத்தில் வந்த நடிகையை விஜய் தன் படத்தில் நடிக்க வைப்பதும் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

அந்த வகையில் விஜய்யின் தமிழன் படத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராயை கேட்டார்களாம். தமிழன் பட தயாரிப்பாளர் குழுவில் ஒருவர் நேரடியாக சென்று ஐஸ்வர்யா ராயிடம் கால்ஷீட் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். ஆரம்பத்திலேயே மறுத்துவிட்ட ஐஸ்வர்யா ராய், அதற்கு சொன்ன காரணம்தான் தயாரிப்பாளரை வியக்க வைத்ததாம்.

விஜய் தனக்கு தம்பி மாதிரி இருப்பார். நான் அவரை விட வயதில் மூத்தவராக இருப்பேன் என்று கூறி இந்த வாய்ப்பை மறுத்துவிட்டார். விஜய், ஐஸ்வர்யா ராய் இருவரும் ஒரே வயதுக் காரர்கள் தான் என்றாலும் விஜய்யை விட ஐஸ்வர்யா ராய் வயதில் மூத்தவராக இருப்பேன் என்று கருதியுள்ளார் என்றால் விஜய் எவ்வளவு ஃபிட்டாக இருந்திருக்கிறார் பாருங்கள்.

விஜய்க்கு ஜோடியாக இன்னும் இளவயது நாயகிகள் தான் சரியாக இருக்கும் என்று கூறி இந்த வாய்ப்பை நிராகரித்து விட்டாராம். உடனே அந்த படத்தில் பிரியங்கா சோப்ராவை நடிக்க வைத்திருக்கிறார்கள். அவரும் உலக அழகி பட்டம் வென்றவர்தான்.

ஐஸ்வர்யா ராய் தமிழில் இருவர், படம் மூலம் அறிமுகமானார். 1994ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றிருந்தவர் 1997ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் மோகன்லால் ஜோடியாக நடித்தார். அடுத்து ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ் படத்தில் பிரசாந்த் ஜோடியாக நடித்தார் ஐஸ். அவருக்கு பிறகு ராஜீவ் மேனன் இயக்கிய கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அஜித்துடன் மம்மூட்டிக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார். பின்னர் மீண்டும் மணி ரத்னம் இயக்கத்தில் குரு படத்தில் தமிழ், ஹிந்தி இருமொழிகளிலும் நடித்தார். அடுத்து ஷங்கரின் எந்திரன் படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாகவும், மணிரத்னம் இயக்கத்தில் ராவணன், பொன்னியின் செல்வன் என நடித்திருக்கிறார்.

பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி, ஊமை ராணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் திரையரங்கிற்கு வர இருக்கிறது. வரும் ஏப்ரல் 28ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகிறது. 

Tags:    

Similar News