Aditi shankar நடிக்கும் அடுத்த படம்! ஜோடி இவராம்!
விஷ்ணு வர்தன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் கமிட் ஆகி இருக்கிறார். அந்த படத்தில் அதர்வா தம்பி ஆகாஷ் ஜோடியாக நடிக்கிறார்.;

கார்த்தி நடிப்பில் விருமன் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை அதிதி ஷங்கர் தற்போது புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளாராம். அது சிம்பு நடிக்கவேண்டிய படம் என்பதும் அதில் தற்போது வேறொரு ஹீரோ நடிக்கிறார் என்பதும் ஹைலைட். aditi shankar family

பிரம்மாண்ட படங்களை இயக்கி தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தவர் ஷங்கர். இவரது இந்தியன் படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அடுத்து முதல்வன், எந்திரன், 2.0 என பாலிவுட் படங்களுக்கே சவால் விட்டு தனது படங்களை ரிலீஸ் செய்தவர் ஷங்கர். இவரது இயக்கத்தில் தற்போது இந்தியன் 2, ராம்சரண் 15 ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. director shankar upcoming movies

ஷங்கரின் மகன் அதிதி, கடந்த ஆண்டு கார்த்தி நடிக்க அவருக்கு ஜோடியாக விருமன் படத்தில் அறிமுகமானார். நல்ல நடிகை என்று பெயர் எடுத்த அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் அமைந்தன. சிவகார்த்திகேயனுடன் அவர் ஜோடியாக நடிக்கும் மாவீரன் படம் தற்போது தயாராகி வருகிறது. aditi shankar maaveeran

இதனைத் தொடர்ந்து விஷ்ணு வர்தன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் கமிட் ஆகி இருக்கிறார். அந்த படத்தில் அதர்வா தம்பி ஆகாஷ் ஜோடியாக நடிக்கிறார். ஏற்கனவே நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பில் அதிதி கலந்துகொண்டுள்ளார். aditi shankar aakash murali

விஷ்ணுவர்தன் படத்தை முடித்துக் கொண்டு அடுத்து அவர் கொரோனா குமார் படத்தில் நடிக்க இருக்கிறார். முதலில் சிம்பு நடிப்பதாக கூறப்பட்ட இந்த படம் பின் அவருக்கு பதிலாக வேறொரு நடிகரை வைத்து உருவாக்கப்படுகிறது. கோகுல் இயக்கும் இந்த படத்தின் நாயகனாக பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார். aditi shankar corona kumar
பிரதீப் ஜோடியாக இந்த படத்தில் அதிதி ஷங்கர் கமிட் ஆகியிருக்கிறார். கார்த்தி, சிவகார்த்திகேயன் ஒரு பெரிய நடிகர்களுடனும் பிரதீப், ஆகாஷ் என புதுமுக நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து வரும் அதிதிக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் இது அவரின் நடிப்புத் திறமைக்கு கிடைத்த வாய்ப்பல்ல அவர் ஷங்கரின் மகள் என்பதால் கிடைத்த வாய்ப்பு எனவும் பலர் பேசுவதை கேட்க முடிகிறது.