Adipurush team to dedicate 1 seat in every theatre to Lord Hanuman-‘ஆதிபுருஷ்’ வெளியாகும் அனைத்து தியேட்டர்களிலும் அனுமனுக்கு ஒரு சீட்

Adipurush team to dedicate 1 seat in every theatre to Lord Hanuman-‘ஆதிபுருஷ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியான 16 மணி நேரத்தில் அனைத்து மொழிகளிலும் 6 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.;

Update: 2023-06-07 17:15 GMT

பைல் படம்.

Adipurush team to dedicate 1 seat in every theatre to Lord Hanuman-ராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் ஆகியோர் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் வரும் ஜூன் 16ஆம் தேதி வெளியாக உள்ளது.

‘ஆதிபுருஷ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியான 16 மணி நேரத்தில் அனைத்து மொழிகளிலும் 6 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்று சாதனை படைத்திருந்தால் படத்துக்கான எதிர்ப்பார்ப்பும் அதிகமாக உள்ளது.

இதனிடையே, ‘ஆதிபுருஷ்’ படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் திரையரங்கின் ஒரு இருக்கையை ஆஞ்சநேயருக்காக காலியாக விட போவதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில், "அர்ப்பணிப்பு, பக்தி மற்றும் விசுவாசத்தின் உருவமாக விளங்கும் அனுமனுக்கு மிகுந்த மரியாதையுடன் கூடிய பணிவான அஞ்சலி. ‘ஆதிபுருஷ்’ படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு தியேட்டரிலும் ஒரு இருக்கையை ஒதுக்குகிறோம்" என்று பதிவிடப்பட்டுள்ளது.

இந்த பதிவு தற்சமயம் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களின் ட்ரோல் மெட்டீரியலாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News