நடிகை வரலட்சுமி சரத்குமாரின் திடீர் மாற்றம்; வியந்து போன ரசிகர்கள்

Actress Varalaxmi - கதாநாயகி, வில்லி என மாறுபட்ட நடிப்பில் அசத்தும் நடிகை வரலட்சுமியின் 'லேட்டஸ்ட்' தோற்றம், ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.;

Update: 2022-08-25 06:43 GMT

actress varalaxmi latest photoshoot -  ‘ஸ்லிம்’ ஆன தோற்றத்தில், நடிகை வரலட்சுமி சரத்குமார்.

Actress Varalaxmi   - தமிழ் சினிமாவில், முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்தவர் நடிகை வரலட்சுமி. 'போடா போடி' படத்தின் மூலம் நடிகர் சிம்புவின் ஜோடியாக அறிமுகமான வரலட்சுமி, அடுத்தடுத்த படங்களில், தனது திறமையை காட்டி, சிறந்த நடிகை என்ற அடையாளத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். 


கதாநாயகியாக மட்டுமின்றி வில்லியாகவும் நடித்து அசத்தும் வரலட்சுமி, தமிழ் படங்களில் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம் என, மற்ற மொழி படங்களிலும் 'பிஸி'யாக  நடித்துவருகிறார்.


வரலட்சுமிக்கு இன்னும் பெயர் சொல்லும் அளவிற்கு சரியான படம் அமையவில்லை. அவரும் படத்திற்கு படம் வித்தியாசங்கள் காட்டி நடித்து வருகிறார்.


இந்நிலையில், கொஞ்சம் உடல் எடையுடன் குண்டாக இருந்த வரலட்சுமி சரத்குமார், தற்போது உடல் எடை குறைத்து, 'ஸ்லிம்' ஆக மாறியுள்ளார். குட்டை கவுன் அணிந்து, போட்டோ ஷூட் நடத்தி, அதில் சில  புகைப்படங்களை, தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள், ஆச்சரியத்தில் மூழ்கி விட்டனர். ஏனெனில்,  அவ்வளவு குண்டாக இருந்த வரலட்சுமி, இப்போது அப்படியே ஒல்லியாக மாறியுள்ளார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News