நடிகை வனிதா விஜயகுமார் கர்ப்பம்..?! வைரலான புகைப்படம்
நடிகை வனிதா விஜயகுமார், தான் கர்ப்பமாக இருப்பது போன்ற படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். வைரலானது அப்புகைப்படம்.;
நடிகை வனிதா விஜயகுமாரைப் பற்றி வதந்திகளும் சர்ச்சைகளும் வரிசை கட்டி நிற்பது ஒன்றும் புதிதல்ல. நடிகர் விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியின் மகளான வனிதா விஜயகுமார், விஜய் நடித்த 'சந்திரலேகா' படத்தில் விஜய்க்கு நாயகியாக நடித்து தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார்.
அடுத்தடுத்த படங்களில் நடித்து புகழடைந்த வனிதாவுக்கு திருமண வாழ்க்கைதான் சரிவராமல் போய் திரைப்பயணத்தில் சறுக்கலும் மன உளைச்சலும் அவரை வதைத்தெடுத்தது. ஆனாலும், அனைத்தையும் சமாளித்துக் கரையேறிய வனிதா, பிக்பாஸ், குக் வித் கோமாளி உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் இழந்ததை மீட்டவராய் மீண்டும் பிஸியானார்.
இந்தநிலையில், தான் கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார் வனிதா. இந்தப்படம் சோஷியல் மீடியாவில் பரபரவெனப்பற்றி வைரலானது. வனிதா கர்ப்பமாக இருப்பது பற்றி நெட்டிசன்கள் ஏகத்துக்கும் கமெண்ட் போட்டு கலக்கத் தொடங்கிவிட்டனர்.
உடனே, தான் பதிவிட்ட சம்பந்தப்பட்ட புகைப்படத்துக்கு வனிதாவே விவரமான விளக்கம் கொடுத்து விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அது என்னவென்றால், வனிதா, 'வாசுவின் கர்ப்பிணிகள்' என்ற படத்தில் நடிக்கிறார். இதில் அவர் நிறைமாத கர்ப்பிணியாக பல்லவி என்ற ரோலில் நடிக்கிறார். அந்தப் புகைப்படங்களைத்தான் இன்ஸ்டாவில் பதிவிட்டாராம். அதுதான் வைரலாகியது என்றிருக்கிறார் வனிதா.
மணி நாகராஜ் இயக்கத்தில், மாஸ்டர் பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் இந்த படத்தின் போஸ்டரில், தான் கர்ப்பமாக இருப்பது போன்ற போட்டோவை மட்டும் எடுத்து, தனது கேரக்டர் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார் வனிதா. ஆனால், படத்தின் ஸ்டில் எனபதை அறியாமல், வனிதா கர்ப்பமாக இருப்பதை மட்டும் பார்த்துவிட்டு, நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவை பரபரப்பாக்கி விட்டனர். வனிதா என்றாலே, பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்று படத்தின் ஸ்டில்லை பக்காவாகப் பற்றவைத்துவிட்டார்கள்.