யூடியூபரை மணக்கும் பிரபல நடிகை..! உண்மை என்ன?

மாப்பிள்ளை யார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.;

Update: 2024-07-01 11:15 GMT

பிரபல தமிழ் நடிகை ஒருவர் யூடியூபரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை இந்த பதிவில் காண்போம்.

காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சுனைனா. இவர் அந்த படத்தில் நடித்து பல்வேறு தமிழ் இளைஞர்களின் மனதைக் கவர்ந்தார். தொடர்ந்து பல தமிழ் படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தமானார். மாசிலாமணி, நீர்ப்பறவை, சமர், தெறி என பல படங்களில் வந்தார். இந்த படங்களில் தனது கதாபாத்திரத்தை அழுத்தமாக பதித்தார். இதனால் மக்கள் மனதிலும் ஆழமாக பதிந்தார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் சுனைனா. ஆனால் அவரை மணக்க இருப்பது யார் என்பதை அவர் வெளியிடவில்லை. இந்நிலையில், சமீபத்தில் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாக அறிவித்தார் சுனைனா.

இந்நிலையில் மாப்பிள்ளை யார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. துபாயைப் பூர்வீகமாகக் கொண்ட பிரபல யூடியூபர் காலித் அல் அமேரி என்பவர்தான் இவரது வருங்கால கணவர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இவர்களின் நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்த நிலையில், இப்போது திருமணத்துக்காக அவர் இந்தியா வந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News