வைரலாகும் நடிகை சமந்தாவின் டி-ஷர்ட் வாசகம்..!
நடிகை சமந்தா அர்த்தம் பொதிந்த ஆங்கிலவாசகங்கள் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டை அணிந்த போட்டோவை ட்விட்டரில்போட்டது வைரலாகியுள்ளது.;
திரைப் பிரபலங்கள் தங்களது ட்விட்டர் பக்கங்களில் அவ்வப்போது ஓரிரு வாசகங்களில் பதிவுகளோ, புகைப்படங்களோ பதிவிடுவார்கள். அது வைரலாகி பார்வையாளர்கள் மற்றும் அவர்களது ரசிகர்களது மனத்தில் அகலாமல் அமர்ந்துகொள்கிறது. அப்படித்தான், நடிகை சமந்தா ஈர்க்கும்படியான வாசகங்களோடு ஒரு டி-ஷர்ட் அணிந்து ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
தனது முகத்தைவிட பளிச்சென்று பார்வையில்படும்படி முன்பகுதியில், 'யாரும் தனியாக நடந்து செல்வதில்லை' என்கிற பொருளுரைக்கும் ஆங்கில வாசகங்கள் தாங்கிய டி-ஷர்ட்டை அணிந்து புகைப்படம் வெளியிட்டிருக்கும் நடிகை சமந்தா, அடுத்த திருமணத்துக்கு ரெடியாகி விட்டாரா… அதற்கான சிக்னலா இது.. என ட்விட்டர்வாசிகள் ஏகத்துக்கும் கேள்விக்கணைகளைத் தொடுத்து வருகின்றனர். தெலுங்கின் முன்னணி நாயகனான நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதற்கு முன்பாகவும் இப்படித்தான் தனது பெயரில் இருந்த அக்கினேனியைத் தூக்கி எறிந்தார் சமந்தா.
YOU'LL NEVER WALK ALONE என்கிற டி-ஷர்ட் வாசகத்தை புகைப்படம் எடுத்து காண்பித்துள்ள சமந்தா, அதற்கு கேப்ஷனாக In case you needed to hear this as well.. YOU'LL NEVER WALK ALONE என்றும் பதிவிட்டுள்ளார். இதன் காரணமாகத்தான் அவர் தனிமையில் வாடுகிறாரா… அல்லது இனிமேல் தனிமையில் வாடப் போவதில்லை என்பதை மறைமுகமாகச் சொல்கிறாரா என்கிற கேள்வியைப் போட்டு துளைக்கின்றனர் ட்விட்டர்வாசிகள்.
ஒரு பக்கம் நயன்தாரா திருமணமான நான்கு மாதத்துக்குள் இரட்டை ஆண் குழந்தைகள் என்கிற இன்ப அதிர்ச்சி கொடுத்த நிலையில், அடுத்து சமந்தா, இந்தப் புகைப்படத்தின் மூலம் அதைப் போலவே ஏதாவது இன்ப அதிர்ச்சி கொடுக்கப் போகிறாரா என ரசிகர்கள் ஆர்வப்படுகின்றனர்.
சமந்தாவின் இந்த போஸ்ட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் பலவிதமான கமெண்ட்டுகளை அள்ளித் தெளித்து வருகின்றனர். இதில், சில ஆபாச கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன. இந்தநிலையில், தனிமையில் வாடும் சமந்தாவுக்கு துணையாக நான் வேணா கூட வரவா என்கிற வகையிலும் சிலர் கமெண்ட் போட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், சில நாட்களாக சிகிச்சை காரணமாக சமூக வலைத்தளங்கள் பக்கம் இருந்து சற்று ஒதுங்கி இருந்த நடிகை சமந்தா மீண்டும் ஆக்டிவாகி உள்ளாரா? என்கிற கேள்வியும் ஒருபுறம் எழுந்துள்ளது. காதலித்து திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யாவும் சமந்தாவும் திடீரென விவாகரத்து செய்து பிரிந்தது ரசிகர்களையும் சமந்தா, நாக சைதன்யா ஆகியோரின் குடும்பத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
ஆனால், சமந்தா கணவரை விட்டு பிரிந்ததும் ஏகப்பட்ட கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தியும், மது நிறுவன விளம்பரங்களில் நடித்தும் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இந்தநிலையில்தான், திடீரென சமூக வலைத்தளங்களின் பக்கமே சமந்தா காணாமல் போனார். இந்தநிலையில், தற்போது மீண்டும் சமூக வலைத் தளங்களில் சமந்தா பதிவிட்டுள்ள போஸ்ட் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பியுள்ளது. முகத்தைக் கூட காட்டாமல் வெறும் டி-ஷர்ட்டில் உள்ள வாசகத்தை மட்டுமே ஹைலைட் செய்து சமந்தா காட்டிய நிலையில், அவர் தனிமையில் வாடி வருகிறாரா? என்கிற கேள்வியும் கிளம்பி உள்ளது.