'ஜிம் ஒர்க் அவுட்' கவர்ச்சி படங்களை வெளியிட்டார் நடிகை சமந்தா

samantha latest news, samantha latest news tamil, samantha latest images‘ஜிம் ஒர்க் அவுட்’ கவர்ச்சி படங்களை வெளியிட்டு நடிகை சமந்தா இளைஞர்களை கிறங்க வைத்துள்ளார்.;

Update: 2022-11-18 11:08 GMT

samantha latest news, samantha latest news tamil, samantha latest imagesநடிகை சமந்தாவின் ஜிம் ஒர்க் அவுட் கவர்ச்சி படங்கள்.

நடிகை சமந்தா ஜிம் ஒர்க் அவுட் செய்வது போன்ற கவர்ச்சி படங்களை வெளியிட்டு உள்ளார்.

samantha latest news, samantha latest news tamil, samantha latest imagesதமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சென்னையை பூர்வீகமாக கொண்ட இவரது முழு பெயர் சமந்தா ரூத் பிரபு ஆகும். சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் இளம் வணிகவியல் பட்டம் பெற்ற இவர் ஆரம்பத்தில் மாடலிங் துறையில் நடித்து வந்தார். அதன் பின்னர் தெலுங்கு திரைப்படமான ஏ மாய சேசாவே என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் தமிழ் பதிப்பான விண்ணைத் தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்காக சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம் பேர் வருது கடந்த 2010 ஆம் ஆண்டில் இவருக்கு கிடைத்தது.

samantha latest news, samantha latest news tamil, samantha latest imagesஅதன் பிறகு பானா காத்தாடி, மாஸ்கோவின் காவிரி, நடுநிசி நாய்கள், நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, தங்க மகன், தெறி ஆகிய படங்களில் நடித்தார். ஏக் திவானா தா என்ற இந்தி படத்திலும் சமந்தா நடித்துள்ளார் .ஆட்டோ நகர் சூர்யா ,சீதம்மா வகித்லோ சிரிமல்லே சேத்து, எவடு, 24 ஆகிய தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தனது சிறந்த நடிப்பிற்காக தென்னிந்திய பிலிம் பேர் விருது, நந்தி விருது ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.

samantha latest news, samantha latest news tamil, samantha latest imagesஇப்படி தமிழ், தெலுங்கு, மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வந்த நடிகை சமந்தாவுக்கும் ,தெலுங்கு உலகின் முன்னணி நடிகரான நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாக சைதன்யாவுக்கும் காதல் ஏற்பட்டது. பின்பு இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆறாம் தேதி இவர்களது திருமணம் கோவாவில் நடந்தது. நடிகை சமந்தா கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர். நாகசைதன்யா இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் இரண்டு மத முறைப்படியும் இவர்களது திருமணம் நடைபெற்றது. இதை தொடர்ந்து சமந்தா ரூத் பிரபு என்ற தனது பெயரை சமந்தா அக்கினேனி என மாற்றிக் கொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை நீடிக்க வில்லை. 2021 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டு சமந்தா - நாகசைதன்யா ஜோடி பிரிந்து விவாகரத்து செய்து கொண்டனர்.

samantha latest news, samantha latest news tamil, samantha latest imagesஅதன் பிறகு அதிக படங்களில் இவர் நடிக்கவில்லை. இந்த நிலையில் நடிகை சமந்தா நடித்த யசோதா என்ற திரைப்படம் கடந்த 11ஆம் தேதி வெளியானது. வாடகை தாய் பற்றிய கதை கருவை கையில் எடுத்திருக்கும் இந்த திரைப்படம் தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் வசூலில் பல கோடிகளை அள்ளிக் கொண்டு இருக்கிறது.  இந்நிலையில் யசோதா படம் ரிலீஸ் ஆவதற்கு சில நாட்களுக்கு முன்பு தான் சமந்தா தனக்கு மயோசிட்ஸ் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு இருப்பதாகவும் அதற்காக சிகிச்சை எடுத்து வருவதாகவும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

samantha latest news, samantha latest news tamil, samantha latest imagesஅதன் பிறகு நோயுடன் யசோதா படத்தில் சிறப்பாக நடித்ததால் அவருக்கு கிடைத்த வெற்றியால் தற்போது புத்துணர்ச்சி அடைந்திருக்கிறார். அத்துடன் அவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஹிட்டான புகைப்படங்களை பதிவிட்டு இளைஞர்களை குஷி படுத்திக் கொண்டிருக்கிறார். இறுக்கமான உடைகள் அணிந்து ஜிம்மில் ஒர்க் அவுட் செய்வது போன்ற இந்த புகைப்படங்களில் சமந்தா தன்னுடைய கவர்ச்சியை காட்டி எக்கச்சக்கமான லைக்குகளை பெற்றிருக்கிறார். இதன் மூலம் சினிமாவில் முன்னணி பட வாய்ப்புகள் பெற்று தன்னுடைய மார்க்கெட்டையும் உயர்த்தி வருகிறார்.

Tags:    

Similar News