Myositis Meaning in Tamil-நடிகை சமந்தாவுக்கா இப்படி.. கண்டுகொள்ளாமல் இருந்தால் மரணமா?

Myositis Meaning in Tamil - நடிகை சமந்தா தனக்கு மயோசிடிஸ் இருப்பது கண்டறியப்பட்டதாக அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-01 10:45 GMT

நடிகை சமந்தா.

Myositis Meaning in Tamil - நடிகை சமந்தா மலையாள, தெலுங்கு இணையருக்குப் பிறந்த இவர் சென்னையில் வளர்ந்தார். கடந்த 2007ம் ஆண்டு ரவிவருமணுடைய மாஸ்கோவின் காவிரி திரைப்படத்தில் முதன்முதலாக நடிக்கத் தொடங்கியிருந்தாலும், தெலுங்குத் திரைப்படமான ஏ மாயா சேசவா முதலில் வெளிவந்து, மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தின் தமிழ் பதிப்பான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இத்திரைப்படத்திற்காக, கடந்த 2010ம் ஆண்டு சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை நடிகை சமந்தா பெற்றார். அதன்பின் அவர் நடித்த பிருந்தாவனம், தூக்குடு, சீத்தம்ம வாகிட்டிலோ சிரிமல்லி செட்டு, அத்தாரிண்டிகி தாரேதி , கத்தி போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற, தமிழ், தெலுங்குத் திரைப்படத் துறைகளில் பெயர்பெற்ற, கூடுதல் சம்பளம் பெறும் நடிகைகளுள் ஒருவரானார். இவரது அழகும் துல்லியமான நடிப்பும் இவரை தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணியில் வைத்திருக்கின்றன.

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும், காதலித்து வந்தனர். பின்னர் இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணமானது கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி கோவாவில் நடந்தது.

நடிகை சமந்தா கிறிஸ்தவ மதத்தையும், நாக சைதன்யா இந்து மதத்தையும் சேர்ந்தவர்கள் என்பதால், இரண்டு மத முறைப்படியும் திருமணம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து கடந்த 2021ம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாட்டால் திருமண பந்தத்தில் இருந்து பிரிந்துவிட்டதாக கூட்டாக அறிவித்தனர்.

samantha health condition

இந்த நிலையில், நடிகை சமந்தா தற்போது தீவிர, உடல்நல பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருப்பதால் இவர் நடிக்கும் இரண்டு படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

சமந்தா ரூத் பிரபு கடந்த சனிக்கிழமையன்று தனக்கு மயோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் நிலை கண்டறியப்பட்டதாக அறிவித்தார். ஒரு நாற்காலியில் அமர்ந்து, கைகளால் இதய அடையாளத்தை காட்டும் படத்தை நடிகை வெளியிட்டார்.

ஏற்கனவே இவருக்கு தோல் சம்பந்தமான ஒரு நோய் இருந்து வந்தது. அதனை சரிப்படுத்த சில வருடம் இடைவெளி எடுத்து அதை சரி செய்து பின்னர் நடிக்க வந்தார். இப்பொழுது நன்றாக சென்று கொண்டு இருக்கும் சமந்தா வாழ்வில் மறுபடியும் அந்த நோய் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. அந்த நோயின் பெயர் 'மயோ சைட்டிஷ்' என்று நோய் தனக்கு வந்துள்ளதாக அவரே புகைப்படத்தை வைத்து டுவிட்டரில் பதிவு செய்திருந்தார்.

இந்த மயோ சைட்டிஷ் நோய்க்கு தடுப்பு மருந்துகள் மட்டுமே உள்ளதாகவும், அதனை அழிக்கும் மருந்துகள் ஏதும் இல்லை எனவும், உணவு முறைகள் மூலமாகவே இதை தற்காலிகமாக தடுத்து முடியும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த நோயின் அறிகுறிகள் தசை வீக்கம், உடல் சோர்வு, உடல் மெலிந்து காணப்படுதல், உணவு உட்கொள்ளாத படி தொண்டை வலி இன்னும் சில அறிகுறிகள் இருக்குமாம்.

இந்த நோயை கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால் மரணம் நிச்சயம். ஆனால் தைரியத்துடன் சில விஷயங்களை செய்து வந்தால் நல்ல முறையில் இருக்கலாம் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News