நடிகை மீனாவின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட வீடியோ வைரல்

Actress meena new year and Christmas celebration in paris -நடிகை மீனாவின் வெளிநாட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Update: 2022-12-30 07:53 GMT

நடிகை மீனா கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை பிரான்ஸ் நாட்டின் லயோன் நகரில் கொண்டாடிய வீடியோ புகைப்படங்கள். 

Actress meena new year and Christmas celebration in paris - நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்தவர். இவரது முதல் திரைப்படம் சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் திரைப்படமாகும். 90களில் இருந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் இவர் நடித்துள்ளார். இவர் கதாநாயகியாக நடித்து ரஜினி நடிப்பில் வெளிவந்த முத்து திரைப்படம், ஜப்பான் நாட்டில் வெற்றிகரமாக ஓடியதை அடுத்து அந்நாட்டு ரசிகர்களையும் பெற்றுள்ளார். தொலைக்காட்சித் தொடர்களிலும் நடிகை மீனா நடித்துள்ளார்.

மூத்த நடிகையும் 90களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவருமான மீனா, சமீபத்தில் தனது கணவரை இழந்து வாழ்ந்து வருகிறார். இவரது கணவர் கொரோனா தொற்று காரணமாக உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டு சமீபத்தில் உயிரிழந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் மீனாவின் கணவர் 50 வயதிலேயே காலமானது திரைத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது மீனாவுக்கு 46 வயதே ஆன நிலையில், அவரின் குடும்பத்தினர் தற்போது மீண்டும் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வருகின்றனர்.

நடிகை மீனா மீண்டும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக அவரது நெருங்கிய நண்பர்கள் கூறியிருந்தாலும், அவர் திருமணம் செய்து கொள்வதில் ஆர்வமாக உள்ளாரா என்பது தெரியவில்லை. ஆனால், தற்போது எனது கணவர் இறந்த துக்கத்தில் இருந்தே நான் இன்னும் வெளியே வரவில்லை, அதற்குள் திருமணம் பற்றியெல்லாம் பேசுவதா. நான் இப்போது கதைகளை தேர்வு செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். மற்றபடி என்னை பற்றி பரவும் தகவல் வெறும் வதந்தியே என தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த மீனா, கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்தில் மீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனிடையே கணவர் இறந்த துக்கத்திலிருந்து நடிகை மீனா தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார். சமீபத்தில் தனது 46வது பிறந்தநாளை கேக் வெட்டி நடிகை மீனா கொண்டாடினார்.

actress meena latest news

இந்த நிலையில், நடிகை மீனா, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாட வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

நடிகை மீனா சமூக வலைத்தளங்களிலும் தற்போது ஆக்டிவாக இருந்து வரும் நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை பிரான்ஸ் நாட்டின் லயோன் நகரில் கொண்டாடிய வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். விளக்கொளியில் இரவு நேரத்தில் சாலைகளில் நடந்து செல்வது போன்ற இந்த வீடியோ காட்சிகள் அமைந்துள்ளன.

இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

மேலும் மீனா தான் நடிக்கும் படங்களுக்கான சம்பளத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய திட்டங்களுக்கும் மீனா கிரீன் சிக்னல் கொடுத்துள்ளதாக தொழில்துறை வட்டாரங்களில் கேட்கப்படுகிறது. ஆனால் மீனா தனது சம்பளத்தை வெகுவாக உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News