இந்த வாழ்க்கையே இப்படித்தான்..! நடிகை மீனா உருக்கமான பதிவு

Actress Meena Latest News -'இந்த வாழ்க்கையே இப்படித்தான்.. இந்த கணம் மட்டும் தான் கையில்.. அதை வாழுங்க' என மீனா எமோஷ்னலாக பதிவிட்டு இருக்கிறார்.;

Update: 2022-08-30 08:30 GMT

நடிகை மீனா (பைல் படம்)

Actress Meena Latest News-'இந்த வாழ்க்கையே இப்படித்தான்.. இந்த கணம் மட்டும் தான் கையில்.. அதை வாழுங்க' என மீனா எமோஷ்னலாக பதிவிட்டு இருக்கிறார். கணவர் மரணத்திற்கு பின் மீனாவின் இந்த பதிவு பலரையும் உருக்கமாக்கி இருக்கிறது.

நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக கோலிவுட்டில் அறிமுகமானார். கோலிவுட்டின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடனும் நடிகை மீனா ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வித்யாசாகர் என்ற தொழிலதிபரை மீனா திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு நைனிகா என்ற பெண் குழந்தையும் உண்டு.

இந்நிலையில் நடிகை மீனாவின் கணவர் சில மாதங்களுக்கு முன்பு திடீரென உயிரிழந்தார். இந்த சோகத்தில் இருந்து தற்சமயம் மீண்டு வரும் மீனா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பகிந்துள்ளார். அதில் தனது சிறு வயது போட்டோக்கள் முதல் தற்போது வரை உள்ள போட்டோக்களை பகிர்ந்து 'இந்த வாழ்க்கையே இப்படித்தான்.. இந்த கணம் மட்டும் தான் கையில்.. அதை வாழுங்க' என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News