நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு நடிகை மலைக்காவின் லேட்டஸ்ட் வாழ்த்து..!

பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா அண்மையில், நயன்தாரா - விக்னேஷ் சிவனை நேரில் சந்தித்து திருமண வாழ்த்து தெரித்தார்.

Update: 2022-07-12 02:24 GMT

நயன் விக்கிக்கு வைத்தது தெரிவித்த மலைக்கா அரோரா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அதனை பகிர்ந்த காட்சி.

நடிகை நயன்தாராவுக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் 9-ம் தேதி மாமல்லபுரத்தில் மலைக்கும்படியான பிரமாண்ட திருமணம் நிகழ்ந்தேறியது. திருமண விழாவுக்கு வருகை புரிந்த அனைவரும் கடுமையான கட்டுப்பாட்டுக்கு உட்பட்டே திருமண விழாவில் கலந்து கொண்டனர்.

திருமணத்துக்கு குறிப்பிட்ட முக்கியப் பிரபலங்களான, மொத்தம் 200 பேருக்கு மட்டும் அழைப்பிதழ்கள் அளிக்கப்பட்டன. பாலிவுட்டின் பாட்சா ஷாருக்கான் முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை முன்னணித் திரைப் பிரபலங்களும் முக்கியப் பிரமுகர்களும் திருமணத்தில் பங்கேற்று சிறப்பித்தனர்.

அந்நேரத்தில், திருமணத்தில் பங்குபெற இயலாத சூழ்நிலை கொண்ட பல்வேறு தரப்பினர் தற்போது வரை நயன் - விக்கியை நேரில் சந்தித்து  வாழ்த்துகளைப் பரிமாறி வருகின்றனர்.

இந்தநிலையில், தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரையும் பாலிவுட் நடிகையான மலைக்கா அரோரா நேரில் சந்தித்து அவர்களுக்கு திருமண வாழ்த்து கூறி மகிழ்வைத் தெரிவித்தார். அப்புகைப்படத்தை மலைக்கா அரோரா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அப்பதிவுக்கு பின்னூட்டங்களும் லைக்குகளும் அள்ளுகின்றன.

Tags:    

Similar News