பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி ஆக போகிறார் நடிகை மைனா நந்தினி
GP Muthu No 1 in Ormax Bigg Boss Rating -பிக்பாஸ் ஆறாவது சீசன் வீட்டிற்குள் என்ட்ரி ஆக போகிறார் நடிகை மைனா நந்தினி என்ற தகவல் வெளியாகி உள்ளது.;
பிக்பாஸ் 6 தொடக்க விழா நிகழ்ச்சி பைல் படம்.
GP Muthu No 1 in Ormax Bigg Boss Rating - உலக நாயகன் கமல்ஹாசன் தமிழில் நடத்தி வரும் பிக் பாஸ் ஆறாவது சீசன் அக்டோபர் ஒன்பதாம் தேதி ஞாயிற்றுக்கிழமை விஜய் தொலைக்காட்சியில் தொடங்கியது. தினமும் இரவு 9.30 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. பிக்பாஸ் 6வது சீசன் நிகழ்ச்சி ஆரம்பமே களை கட்டியது. காரணம் ஆரம்பத்தில் உள்ளே நுழைந்த பிரபல யூடியுபர் ஜி. பி. முத்து தான்.
முதல் நாள் நிகழ்ச்சியிலேயே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் 20 போட்டியாளர்கள் யார் யார் என்ற விவரம் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி தினமும் றெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கிறது. இந்த ஒரு வார காலத்தில் யார் யார் தங்களுடைய திறமையை எந்த அளவில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் ஓர்மக்ஸ் நிறுவனம் ரேட்டிங் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் பிரபல யூடியுபாளர் ஜி.பி. முத்து தான் முதலிடத்தை பிடித்திருக்கிறார். இரண்டாம் இடத்தில் ரக்சிதா மகாலட்சுமி இருக்கிறார். அதற்கு அடுத்தபடியாக ஆயிஷா, இலங்கை ஜனனி, அமுதவாணன் ஆகியோரும் இருக்கிறார்கள். இதுதான் டாப் 5 பட்டியல் ஆகும். இதனைத் தொடர்ந்து போட்டியாளர்களுக்கான நாமினேஷன் தொடங்கியுள்ளது.
இந்த பரபரப்பான சூழலில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகிறேன் என்று என்ட்ரி கொடுத்திருக்கிறார் பிரபல சின்னத்திரை நடிகை மற்றும் துணை நடிகையான மைனா நந்தினி. சரவணன் மீனாட்சி தொடர் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த மைனா நந்தினி அதன் பின்னர் நிறைய தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் தனது கணவருடன் நடத்தி வரும் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் நிகழ்ச்சி ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் இழுத்தது. இதனை தொடர்ந்து மைனா விங்ஸ் என்கிற ஒரு இணையதள பக்கத்தை மைனா நந்தினி தொடங்கியுள்ளார். அதில் அவரது ரசிகர்கள் அவரை பின் தொடர்ந்து வருகிறார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆறாவது சீசனில் தொடக்கத்திலேயே வருவார் என எதிர்பார்க்கப்பட்ட மைனா நந்தினி ஒரு வாரம் கழித்து உள்ளே வருகிறேன் என்று என்ட்ரி ஆகி இருக்கிறார். ஆதலால் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு இடையே ஏற்படும் சண்டை 40 நாட்கள் கழித்து வருவதற்கு பதிலாக ஒரு வாரத்திலேயே வந்து விடும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
பிக்பாஸ் ஆறாவது சீசன் நிகழ்ச்சியை மிகவும் பிரபல படுத்துவதற்காக வீட்டிற்குள் இருந்து வீதிக்கு வர வைத்து இருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் பொது இடங்களில் போட்டியாளர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2